சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

'Google Pay ' க்கு ரிசர்வ் வங்கி தடை செய்யயப்படுள்ளதா?

இந்தியாவில் பலகோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனைகளுக்காக கூகுள் பே ஆப்பை பயன்படுத்தி வருவதை தொடர்ந்து இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதிகளும் மற்றும் அதுமட்டுமின்றி, பணமும் பெற்று கொள்ளலாம்.என்றவசதியை தந்தவரும் Google Pay என்னும் செயலி .

இந்த நிலையில், Google Pay மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது  போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு பொழுது  ரிசர்வ் வங்கி தரப்பில், கூகுள் பே செயலி எந்த ஒரு பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை.அதற்க்கு மாறாக, இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலியே (third party money transfer app) என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து google pay  சார்பாக தங்களுடைய விளக்கத்தை தெரிவித்தது. அதில்  தங்களது செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே மட்டுமே பண பரிவர்த்தனை நடைபெற தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும், அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும், அதனாலேயே என்பிசிஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் கூகுள் பே இடம்பெறவில்லை” என்றும்  google pay  தன் விளக்கத்தை அளித்துள்ளது.

இதன் அடிப்படையில், ’google pay’ செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல்கள் பரவுகின்றன.

ரிசர்வ் வங்கியானது google பெ க்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. மற்றும் மற்ற செயலிகளைப் போல google pay செயலியில் பணத்தை அனுப்புவது பாதுகாப்பான ஒன்றே. எந்த ஆபத்தும் இல்லை தெரிவிக்கப்படுள்ளது.

Is the Reserve Bank banned for 'Google Pay'?