சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டிக் டாக் வாசிகளின் அட்டகாசங்கள்

2017 -ல் சீனா நாடு வெளியிட்ட செயலி தான் டிக் டாக்.  இதில் நடனம் பாட்டு என பல விதமான காணோலியை உருவாக்கும் பொழுதுபோக்கு செயலி ஆகும். இதில் பல பெண்கள்,  ஆண்கள்,  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் உபயோகித்து இணையத்தில் தன் காணோலியை வெளியிட்டு மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். 

பல பெண்கள் இதில் இருக்கும் ஆபத்து அறியாமல் காதல் பாடல்கள், வசனங்களுக்கு ஏற்ற வாறு முகபாவனைகள் செய்து..  நடனம் ஆடி வெளியிட..  அதற்காக அவர்களுக்கு என்று நிறைய விசிறி படைகள் திரண்டு வர..  நிறைய லைக் கமெண்ட்காகவும்,  தன் விசிறிகளுக்காவும்,  மேலும் மேலும் காணோலிகள் வெளியிட ஆரம்பித்து..  அதை தன் முழுநேர வேலையாகவே மாத்திக்கொண்டனர் பலர்.

உண்மையான திறமைகள் கொண்டவர்களை டிக்டாக் மூலம் அடையாளம் காண தொடங்கினாலூம். இதில் ஆபத்துகளே அதிகம். இதனால் பல இளைய தலைமுறையினர் தன் வாழ்க்கையே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.  பல மாணவ மாணவிகளை முழு நேரமும்  கவனத்தை ஈர்க்க வைத்து அடிமையாக்கிவிட்டது இந்த டிக் டாக் செயலி. பல அல்ஷாடியங்கள் மேடை ஏற துவங்கின இந்த டிக் டாக்கால். திருமணமான தம்பதியினர்களுக்கு இடையே உள்ள காதலும் ஊடலும் இந்த டிக் டாக்கில் காணோலியாக பதிவிட ஆரம்பம் ஆனது.  பல மாணவிகள் இரட்டை அர்த்தம் கொண்ட  சினிமா காதல் பாடல்களுக்கும் வசனங்களுக்கும்  ஏற்றவாறு ஆடை அணிந்து நடனமாடி நடித்து பதிவிட்டனர்.

சில நேர பொழுதுபோக்காக உபயோகிக்க வேண்டிய செயலி எங்கு சென்றாலும் எப்போழுது உபயோகபடுத்த தூண்டியது  பலரை.  திருமண மேடையில் மணமக்கள் கோலத்திலே டிக் டாக்,  அவர்களின் தோழர்கள் ஒன்று சேர்ந்து டிக்டாக் என பல வேறு உருவமெடுக்க துவங்கியது இந்த கொடூற செயலி. இதை தடுக்க வேண்டும் என பலரும் இணையத்தில் பதிவிட்டனர்.
இளைய தலைமுறை மட்டுமல்லாமல் பல வயதான பெரியவர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த டிக்டாக் செயலி.  அவர்களும் நடனம் ஆடி வசனங்கள் பேசி வெளியிட ஆரம்பித்து மகிழ்ந்தனர்.பல தம்பதிகள் காதல் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் டிக் டாக் செய்தனர்.  பல பெண்கள் கவர்ச்சியாகவும் நடித்து வருத்தம் தருக்கூடிய அளவுக்கு டிக் டாக் செய்தனர்.

இதில் பெண்கள் பல அபாய வலையில் சிக்கிய செய்தி வெளிவந்தும் பெண்கள் இதில் இருந்து பின் வாங்க வில்லை.  டிக் டாக் செய்பவர்களின் மனநிலை நாளுக்கு நாள் டிக் டாக்காகவே வாழும் மாதிரி மாற்றிக்கொண்டே வந்தது.  டிக் டாக் செய்வதற்காகவே புது கைபேசி,  கேமரா,  செல்பி ஸ்டிக்,  ஆடை,  வித்தியாசமான உடை அணிகலன்கள் என அனைத்து மேலும் முக்கியத்துவம் கொடுத்து வாங்க செய்தது இந்த டிக் டாக். தான் ஒரு பெரிய கதாநாயகன் கதாநாயகி பெரிய ஸ்டார் தனக்கு பெரிய விசிறி படைகள் இருக்கிறது என்ற எண்ணம் டிக் டாக் செய்யும் அனைவரின மனதில் பதிந்தது.  டிக் டாக் செய்து அதை இணையத்தில பதிவிட்டால் நாம் பிரபலமாகம் என்ற காரணம் பலரையும் ஈர்த்து இதனுள் விழ வைத்தது. 
தான் உங்கள் இரசிகன் விசிறி என அறிமுகம் செய்து பல முகம் காட்டா தோழர்கள் பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை தங்கள் வசத்தில் கொண்டு வர இது ஒரு பெரிய எளிய வழியாக இருந்தது.

அதற்கு விடிவுகாலமாய் இந்திய அரசு சீனநாட்டு வெளியிட்ட செயலிகளை தடை செய்ததில் டிக் டிக்கும் ஒன்றாக வந்தது.  இப்போது தன் ஒரு கை இழந்ததாக நினைக்கிறார்கள் முழுநேர டிக் டாக் வாசிகள்.  பெண்களின் நடனத்தை இரசிக்காமல் அப்பெண்களையே இரசித்தவர்களுக்கு ஏமாற்றங்கள் நிறையவ வந்தது. எனினும் இது ஒரு நல்ல மாற்றம்.  இந்த பயணம் தொடர வேண்டும்.  டிக் டாக்கில் முழ்கி வாழ்க்கையை தொலைக்க இருந்த இளைய தலைமுறை இப்போது காப்பற்ற பட்டது என்பது குறிப்பிடதக்கது.

People's addicted to tik tok application