சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய் தேடி அலைபவரா நீங்கள்? அப்போ நீங்க இதை படிங்க - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து , தற்போது வரை 1.15 சதவிதம் அளவிற்கு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது, மேலும் இப்பொது பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தில் இன்று எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை .

குறுகிய கால கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் நான்கு சதவிதமாகவே தொடர்கிறது. 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார் 

இதுவரை சாதாரண ஏழை மக்கள் பெரும் 75 சதவீதமாக இருந்த நகைக்கடன் இனி  90  சதவீதமாக பெற்றுக்கொள்ளும்படி அதிகரிக்கபட்டுள்ளது மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதாலும் கொரோனாவால் உணவு பொருட்களின் விலை சர்வதேச நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 10 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என கூறப்பட்டது .

The jewelry loan, which was 75 per cent of the ordinary poor, has been increased to 90 per cent and the offer will be effective till March 31, 2021.