பெரும்பாலான மக்கள் தன் வீட்டு பெண்களின் திருமணம், சீர் வரிசை, வளைகாப்பு, குழந்தை பிறந்தல், புதுமனை புகுவிழா என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தங்க ஆபரணங்களை பெரும் அளவிற்கு மரியாதை செய்யும் விதமாக வைத்துள்ளனர்.
இப்போது தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இலு பலருக்கு பல நெருக்கடிகள் தந்துள்ளது.
அதிலும் பெண் பிள்ளை பெற்றவர்கள் மிகவும் வருத்ததுக்கு ஆளாகியுள்ளார்கள். அதிலும் கொராணா காலத்திற்கு முன்பு நிச்சயம் ஆனவர்கள் , கல்யாணம் பேசி முடித்தவர்கள் இவ்வளவு சவரண் தங்கம் தன் பெண் பிள்ளைக்கு தருவதாக ஒப்புக்கொண்டவர்கள் அந்த குறிப்பிட்ட சவரண் தங்களால் வாங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் மட்டும் இன்றி தங்க நகை கடை உரிமையாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து விட்டது. இதனால் தங்களால் லாபம் பார்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Gold rate increases