சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கூகுளின் அசத்தல் 5 புதிய சிறப்பு அம்சங்கள்

கூகுளின் அடுத்த இயங்குதளத்தின் புதுபிப்பை வெளியிட உள்ளது. அதில் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது.  அதில் முக்கிய 5 அம்சங்களை பார்ப்போம். 

1) அவசர நேரத்தில் உதவி :

தீ விபத்து போன்ற அவசர நேரங்களில் நம் ஆன்ராய்டு கைபேசி மூலம் அருகில் உள்ள அவசர சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ளலாம் . இதில் நாம் பேச வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவசர எண்ணிற்கு கால் செய்தால் மட்டும் போதும்,  அவசர செய்தி அருகில் உள்ள தகவல் மையத்திற்கு செய்தி சென்றுவிடும். 

2) நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே வரும் முன்னெச்சரிக்கை :

நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே தகவல் தரும் ஷேக் அலர்ட் லா எனப்படும் செயலி இதில் இறக்குமதி செய்து நிலநடுக்கம் பற்றிய தகவலை அறிந்து கொள்ளலாம். 


3) காரில் பேசும் தொடுதிரை:

நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கவனம் முழுவதும் சாலையிலும்,  வாகனத்தை செலுத்துவதிலும் தான் இருக்கும். அதில் தான் அடுத்து எங்கே செல்வது தனது தினசரி வேலை இடங்கள் அறிய இனி கைபேசி எடுக்க தேவையில்லை,  வாகனத்தில் உள்ள ஆன்ராய்டு ஸ்கிரீனில் தனது தினசரி வேலைகளை அதிலே பார்த்துக்கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

4) உங்கள் தூக்கத்தை சீராக்கும் செயலி :

கைபேசியை பார்த்து கொண்டு பலர் இரவில் தாமதமாக தூங்குவதும் தாமதமாக எழுவதும் உண்டு.  அதனால் இதில் பெட் டைம் என்ற பெயரில் ஓர் அருமையான வசதி செய்யப்பட்டுள்ளது.  நாம் தூங்கி எழும் நேரத்தை குறிப்பிட்டுவிட்டால் அந்த நேரத்தில் சரியாக எச்சரிக்கை செய்து ஸ்க்ரீன் ஆப் ஆகி விடும்.  காலை அலாரம் ஒலித்து எழுப்பியும் விடும். 

5) கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் வசதி :

கண் பார்வையில் கொளாறு உள்ளவர்கள்,  ஒளியில் சில பிரச்சினைகள் சந்திக்கும் மக்களுக்கு ஏற்றவாறு ஸ்கிரீனில் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகிள் நிறுவனம் எப்போதும் தன்னுடைய ஆராய்ச்சியை மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் செயல்படுவது அனைவரும் அறிந்ததே . கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் , அவர்கள் மூலம் யாருக்கு நோய்த்தொற்று  பரவி இருக்கலாம் என கண்டறியும் காண்டாக்ட் ட்ரஸிங் வசதியை கூகிள் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

5 new things your Android phone.Android phone should get better and more helpful over time, even while you wait for the latest OS update to arrive. Like the recently announced Nearby Share that supports devices going back to Android 6.0, we’re building new features that improve the experience of billions of devices around the world Save precious seconds during an emergency.Get alerted to earthquakes around you Get more done in the car.Rest easy, without interruptions.Lookout makes the physical world more accessible