சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையில் இருவர் கைது

 

தோனி திரைப்படத்தில் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்திய  பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரனையில் தெரிய வந்தது .மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தன . 

இறுதியில் அவர் குடும்பத்தாரின் வேண்டுகோளின் அடிப்படையில் ,புகார் அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிபிஐ விசாரனையில் வழக்கு திருப்புமுனையாக  சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களுக்கு போதை பொருள் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நெருக்கிய தரப்பினர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது .


அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு காவல் துறையினரும்  வழக்கை விசாரித்து வந்த நிலையில் திடீரென நேற்று இரவு, சுஷாந்த் சிங் ராஜ்புட் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தியின்  சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங் ராஜ்புட் மேனேஜர் சாமுவேல் மிரன்டா கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட்ற்காக மரிஜுவானா வகை போதைப்பொருளை வாங்கியதாகவும் அவருக்கு அதை தொடர்ந்து  கொடுத்து போதை பொருளுக்கு அடிமையாக்கியதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதுவே அவர் தற்கொலைக்கு காரணம் என்றும் அது தற்கொலையா இல்லை கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர் .

Bollywood actor Sushant Singh Rajput, who had a stellar performance in Dhoni's film, committed suicide at his home in Mumbai last June.