சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நவீன உணவுமுறையை பின்பற்றி பாலிவுட் நடிகை உயிரிழப்பு 

bollywood-actress-died-following-modern-diet
  பிரேமா   | Last Modified : 08 Oct, 2020 06:31 am சினிமா பாலிவுட்

நவீன உணவு முறை பழக்கங்களை நமது ஊரில் நகரத்தில் பல்வேறு மக்களும் பின்பற்றி வருகின்றனர் .கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை உண்டு பின்னர் அதிக எடை கூடி ஓரிரு மாதங்களில் தங்களது உடம்பை குறைக்க முயற்சி செய்கின்றனர் .அதனை பல்வேறு நாடுகளில் வாழும் மக்களும் இந்த நவீன உணவு முறை பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் .இந்த நவீன உணவு முறை பழக்கமானது  ,பல்வேறு பெயர்களை கொண்டு இணையதளங்களில் உள்ளது  .அவ்வாறான ஒரு உணவு முறையை பின்பற்றி உயிரிழந்துள்ளார் பாலிவுட் நடிகை மிஷ்டி முகர்ஜி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது .காரணம் 28 வயது ஆன இவர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார் .

இதற்கு காரணம் அவர் பின்பற்றி வந்த கீட்டோ டயட்  என்ற நவீன உணவு முறை பழக்கம் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது .கீட்டோ டயட் என்பது அதிகளவு கொழுப்பு ,நடுத்தர அளவு புரதம் ,மிகவும் குறைந்த அளவு கார்போஹைட்ரெட் எடுத்துகொள்வதன் மூலம் அதிகளவு புரதம் சிறுநீரக பைகளுக்கு சென்று அதிக அழுத்தம் கொடுப்பதால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .

பலரும் பல்வேறு உணவு முறைகளை மருத்துவரை அணுகாமல் இணையவழியிலேயே பின்பற்றுவதால் ஏற்படும் பிரச்சனைதான் இது .ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இது போன்ற உணவு முறைகளை பின்பற்ற கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

Bollywood actress Mishti Mukherjee, who died following a modern diet, died last Friday.