சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இஸ்பெட் ராஜாவுக்கும் இதய ராணிக்கும் காதலா? பரபரப்பு ட்வீட்

புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர்,  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை " என்ற தொடர் மூலம் பல இரசிகர்களை கவர்ந்தார். 

பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்தார். 

பின் "மேயாத மான் " , "கடைக்குட்டி சிங்கம் "போன்ற திரைப்படத்தில் நடித்து பல இரசிகர்களை மகிழ்வித்தார் .

 " பெள்ளி சூப்ளி" தெலுங்கு என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் அவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்ததும் பல இரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

அதில் கதாநாயகனாக நடிப்பது பிக் பாஸ் மற்றும் ப்யார் ப்ரேமா காதல்,  இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படத்தின் மூலமாகவும் பல பெண்களை கவர்ந்த ஹரிஸ் கல்யான் அவர்கள் தான் .

இந்நிலையில் ஹரிஸ் கல்யான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்  தான் ப்ரியா பவானி சங்கர் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடன் "finally happy for us❤️❤️" என்று போட்டு ப்ரியா அவர்களை டேக் செய்துள்ளார். 

அதற்கு ப்ரியா அவர்கள் " உன்னால லாக் டவுன் முடியும் வரை பொறுமையாய் இருக்க முடியாதா? " என்று கோவத்துடன் கமெண்ட் செய்துள்ளார். 

அதற்கு ஹரிஸ் கல்யான் அவர்கள் " என்னால்  வெயிட் பண்ண முடியாது நாளை மாலை 5 மணிக்கு அதிகார பூர்வமாக அறிவிக்க போகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனை கண்டு அவர்களது இரசிகர்கள் அதிர்ச்சியில் பல கமெண்ட்கள் செய்து வருகிறார்கள்.

Actor Haris kalyan & actress priya bhavani shankar going to announce in public