சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சூரரைப்போற்று படத்திற்கு தடை கோரி வழக்கு

police-complaint-against-soorarai-potru-movie
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:40 pm சினிமா செய்திகள்

இயக்குனர்  சுதா கொங்கரா நடிகர் சூரியவை வைத்து இயக்கிய சூரரைப்போற்று படத்திற்கு எதிராக தடைகோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 


அப்படத்தில் மண்ணுருண்ட என்ற பாடல்  இடம்பெற்றுள்ளது  இப்பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது ,இப்படலானது   இறுதி ஊர்வலத்தின் போது பாடப்படும் குத்து பாடலாக உருவாக்கப்பட்டு பட்டி  தொட்டி எங்கும் பரவி வரும் சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது 

இந்த பாடலில்  சாதி வெறியை தூண்டும்விதமாக வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது ,,அதாவது அப்பாடல் வரியில் கீழ் சாதி ஒடம்புல ஓடுறது சாக்கடையா ? அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா என்ற வரி இடம்பெற்று இருப்பதால்  கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பில் கோவை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மேலும் மக்களிடையே சாதி வெறியை தூண்டும்  என்பதால் இப்படத்திற்கு தடை  செய்யவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பில் சூர்யாவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

 

police complaint against soorarai potru movie