சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டிக் டாக்கில் மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா சிசிடிவியில் வெளியான காட்சி

தகராறு, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடிவீரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை பூர்ணா தமிழ் படங்களில் மட்டுமல்லாமல்  தெலுங்கு மற்றும் மலையாளம் நடித்துள்ளார் .

கடந்த சில காலங்களாக பட வாய்ப்புகள் குறைந்த   நிலையில் சினிமாவில் ஒரு சில பாடலுக்காக  நடனம் ஆடிவரும் நிலையில் நடிகை பூர்ணா டிக் டாக்கில் மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை பூர்ணா, ஷாம்னா காசிம் என்ற பெயரில் டிக் டாக்கில் கணக்கு ஒன்று தொடங்கி அதன் வழியாக தனது திறமையை வெளி காட்டிவந்தார்.

டிக்டாகீல் , அன்வர் என்ற பெயரில் டிக்டாக் மூலம் நடிகை பூரணவிடம் அறிமுகமாகி தான் கோழிக்கோட்டிலும், துபாயிலும் பெரிய நகைக்கடை வைத்திருப்பதாகவும், தற்போது துபாயில் வசிப்பதாகவும் கூறி பழகியுள்ளான்.

இருவரும் செல்போனில் பேசிவந்த நிலையில் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள அந்த நகைக்கடை அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த விவரத்தை தன் தாய் ரவுலா இடம் தெரிவித்துள்ளார் .அதன் அடிப்படையில் இவை அணைத்தும் உண்மை என்று நம்பிய நடிகை  பூர்ணாவும், தனது வீட்டிற்கு உங்கள் குடும்பத்தினருடன் வந்து பெண் கேட்க்குமாறு கூறியுள்ளார். 

இதனை தொரடர்ந்து 3ஆம் தேதி அன்வரின் குடும்பம் என்று சொல்லிக்கொண்டு சுமார் 6 பேர் கும்பல் ஒன்று பெண் கேட்டு நடிகை பூர்ணா வீடான கேரள மாநிலம் மாராடு பகுதிக்கு  வந்துள்ளது. ஆனால் டிக்டாக்கில் பழகிய அன்வர் மட்டும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடிகை பூர்ணா அந்த கும்பலிடம்  சுதாரித்து கொண்டு  இன்னொரு நாளில் திருமணம் குறித்து பேசலாம் என்று திருப்பி அனுப்பியதாக கூறப்படுகின்றது.

அந்த 6 பேரு கொண்ட கும்பல் வீட்டில் இருந்த கார், வீட்டின் வெளிப்புற பகுதி, போன்றவற்றை செல்போன் மூலம் படம் பிடித்ததை சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டறிந்த பூர்ணா, அன்வர் என்ற டிக்டாக் பிரபலம் பெயரில் பேசியவர் போலி என்பதை கண்டுபிடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அந்த நபர் ரபீக் என்பது தெரியவந்த நிலையில் சினிமா வாழ்க்கையை கெடுக்காமல் இருக்க தங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று நடிகை பூர்ணாவை  திருமண மோசடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டி வருவதாக அவரது தாய் ரவுலா, மாராடு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் மோசடிக் கும்பலை சேர்ந்த ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சிவதாசன், அஷ்ரப் சையது முகம்மது ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இவர்கள் தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் நடிகையை மிரட்டிய  இந்த கும்பல் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், மாடல் பெண்களை  டிக்டாக் மூலம் பழகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி  லாட்ஜில் வைத்து பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், அதில் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து வைத்து தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மற்றொரு பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கண்டு உஷாரானதால் நடிகை பூர்ணா தப்பியதாக கூறப்படுகின்றது.

 

Actress Poorna caught on TikTok cheating gang in cctv footage