சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன சிறந்த தமிழ் நடிகைகள்

விமலா ராமன்

விமலா ராமன் ஒரு இந்திய திரைப்பட நடிகை, மாடல் மற்றும் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘பொய்' படத்தில் நடித்து அதன்  மூலமாக  முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் 

அவர்  முதலில் சுரேஷ் கோபியுடன் நேரம் என்ற மலையல்படத்தில்  நடித்தார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் பிராணயாகளத்தில் அஜ்மல் அமீருடன் ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில், நஸ்ரானியில் முமுட்டியுடன் மற்றும் ரோமியோவில்  திலீப்புடனும் நடித்துள்ளார். மேலும் மோகன்லாலுடன் ‘காலேஜ் குமரன் ’ மற்றும் 2008 இல் திலீப்புடன் ‘கல்கத்தா நியூஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அவர் சிட்னியில் பிறந்து வளர்த்தவர்.

கோபிகா

gopika

 கோபிகா இந்திய நாட்டை சேர்ந்த கேரளப்பெண் .இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் நடித்து திரையுலகில் முன்னணி  நடிகியாக வளம் வந்தவர்.
 இவர் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்துள்ளார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 2003 பிராணயமனிதூவல் என்ற படத்தின் மூலம்  நடிப்பில் இறங்கினார்,
பின் தமிழில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் அதன் மூலம் நிறைய தமிழ் படங்களில் நடிக்க  வாய்ப்பும் கிடைத்தது .
அவர் 35 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார்.கோபிகா இப்போது தனது மருத்துவர் கணவர் அஜிலேஷ் சாக்கோவுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

வேகா தமோடியா

vega

வேகா தமோடியா  திரைப்பட நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.இவர் தமிழில் இயக்குனர் பாண்டிராஜன் இயக்கிய  பசங்க படத்தில் விமலுடன்  நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் வெங்கட் பிரபு  இயக்கிய சரோஜா படத்தில் தலைப்பின் பெயரிலேயே சரோஜாவா நடித்துள்ளார் . வேகா, படங்களில் நடிக்கும் நோக்கத்துடன் முன்னதாக பிராட்வே நாடக குழுவிற்காக நடித்து நாடகக் கலைகளில் அனுபவத்தைப் பெற்றவர்  மேலும் வேகா தமோடியா 1985 மே 7 அன்று சத்தீஸ்கரில் பிறந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வளர்த்தவர்.நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தனது கல்வியை முடித்த அவர், பின்னர் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயின்றார்.

heroines who acted in some Tamil films have settled in Australia today