சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி - உலக நாயகன் கமல்ஹாசன் உதவி


முந்தைய தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி   நடிகர்கள் படங்களில் இவர் தான் வில்லன் என்றும் சொல்லுமளவுக்கு பல படங்களில்  தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் . அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குனர் மற்றும் ப்ரொடியூஸ்ர் ஆகவும் இருந்துள்ளார் . இவர் தமிழ் படங்களில் மட்டும் அல்லாமல் தெலுங்கு , மலையாள, கன்னட படங்களிலும் பெருமளவு தனது திறமையை வெளிப்படுத்தியவர்  .

இவர் பல திரைப்படங்களில் போலீஸ் வேடம் அணிந்த கதாபாத்திரத்தில் வந்துள்ளார் . இவர் திரைப்படங்களில் ஸ்டண்ட் மேன் ஆகவும் நடித்துள்ளார் . இப்படிபட்ட இவர் தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்த பொன்னம்பலம் அவர்கள் தற்போது மருத்துவமனையில்  இருக்கும் படியான ஒரு வீடீயோவை வெளியுட்டுள்ளார்.


இவர்  முத்து , மைக்கேல் மதன காமராஜன் ,சாமி , இந்தியன், நாட்டாமை  போன்ற பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .


அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 இல் பங்கேற்பாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார் .
அதனை கேள்விப்பட்ட  உலக நாயகன் கமலஹாசன் அவருக்கான மருத்துவ செலவு மற்றும் அவருடைய குழந்தைகளுக்குக்கான படிப்புச்செலவையும் ஏற்றுக்கொள்வதாக   தெரிவித்துள்ளார் . அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவருடைய குடும்பத்துடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தும் , அவருக்கு தேவையான உதவிகளை  செய்தும் வருகிறார் . 

He has been a villain in many of the major Tamil films in previous Tamil cinema.