இணையதளத்தில் காணொளி பார்க்காத ஆட்களை நம்மால் இன்று விரல் விட்டு எண்ணி சொல்லிவிடலாம். காணொளி என்றாலே நினைவிற்க்கு வருவதும் அனைவரின் கைபேசி மற்றும் கணினியில் இருப்பதும் யூடியூப். இதில் திரைப்படம் ,தொடர்கதை (நாடகம்),நகைச்சுவை, செய்திகள், விளையாட்டு, அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்கள், படிப்பு சம்பத்தப்பட்ட காணொளிகள் என அனைத்தும் இருக்கிறது. நாம் ஒன்றை பற்றி தெளிவாக காட்சிகளோடு தெரிந்து கொள்வதற்கு யூடியூப் மிக பெரிய வழியாகும்.
இதில் ஒருவர் தனக்கென்று சேனல் ஆரம்பித்து அதை கூகுள் ஆட்சண்ஸ் ஓடு இணைத்தால் தொலைக்காட்சி போல் விளம்பரங்கள் இணைத்து சம்பாத்தியமும் பார்க்கலாம், பிரபலமும் ஆகலாம். இப்போது ஒருவர் தானாகவே காணொளியை பதிவு செய்து வீட்டிலே அதை அழகாக எடிட்டுங்கும் செய்து தானே அதை சுலபமாக வெளியிடலாம்.
தங்களின் தினசரி வேலைகள், தனிப்பட்ட கலை ஆர்வம், திறமைகள் என்று பலரும் சேனல் ஆரம்பித்து வெளிக்காட்டி கொண்டுள்ளனர். வீட்டை எப்படி எல்லாம் சுத்தம் செய்யலாம் , செலவை குறைத்து எப்படி எல்லாம் வீட்டை காக்கலாம் என்றும், தூக்கி வீசப்படும் பொருட்களை அழகாய் மாற்றுவது குறித்தும் , சமையலறை குறிப்புகள், கடையில் வாங்கப்படும் பீட்சா, ப்ரட், கேக் போன்ற திண்பண்டங்களை வீட்டில் எப்படி செய்து அசத்தலாம் என அனைத்தும் வீட்டில் இருந்தே நிறைய பேர் காணொளியாக வெளிட்டு வருகிறார்கள்.
பழைய துணிகளை திருப்பி எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்றும், கிருமி நாசினி, சானிடைசர், சோப் என அனைவற்றையும் வீட்டிலே எப்படி செய்வது என்றும் , ஒப்பனைகள் செய்து கொள்வது பற்றியும், தையல் பயிற்சி, எம்ப்ராய்ட்ரி பயிற்சி , வீட்டு உபயோகப்பொருட்களின் நன்மை தீமைகள், குழந்தை வளர்ப்பு முதல் என்ன என்ன விளையாட்டுகள் , வேலைகள் கொடுத்து அவர்களை வீட்டிலேயே போர் அடிக்காமல் வைத்துக்கொள்ளலாம் என அ முதல் ஃ வரை காணொளி வெளியிட்டு வருகின்றனர்.
கொரோனா காரணத்தால் பல துறைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதில் சினிமா துறையும் தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளியாகும் தொடர்களும் லைவ் ஷோ செய்யப்படும் நிகழ்ச்சிகளும் ரொம்ப பாதிப்பு அடைந்தது.
இதனால் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் தொடர்களில் நடித்து வந்த கலைஞர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் சிலர் யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் நக்ஷத்ரா, மணிமேகலை, ப்ரியங்கா, சென்னை 28ல் கலக்கிய விஜயலட்சுமி, கதாநாயன் சாந்தனு, பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளியில் பிரபலமான வனிதா விஜயகுமார் என அனைவரும் தங்கள் சேனலை ஆரம்பித்து வெற்றிகரமாக பயணிக்கிறார்கள்.
கையில் ஒரு கேமரா மற்றும் இண்டெர்நெட் இருந்தால் வீட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் யூடியூபர் ஆகலாம். ஆனால் சப்ஸ்க்ரைபர்களும் லைக்குகளும் வீயூஸ்களும் வருவது பொறுத்தே ட்ரெண்டிங் ஆவதும் மற்றும் யூடியூபில் இருந்து லாபம் பார்க்லாம் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
Tamil channels are increasing in youtube . A chance to earn from home .