சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சீரியலில் இருந்து சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையில் கொடிகட்டி பறக்கும் நடிகைகள்

சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரபல நடிகைகள் 

நிவேதா தாமஸ்:


தர்பார் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்து பலபேர் மனதில் இடம் பிடித்தவர் நிவேதா தாமஸ் .இவர் பள்ளி பருவத்திலியே நடிக்க வந்தவர் என்பது பலருக்கும் தெரியாது .கேரளாவில் பிறந்த இவர் நல்ல உச்சரிப்புடன்  தமிழ் பேசக்கூடியவர் .இவர் சிறு வயதிலேயே மலையாள படத்தில்  சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றவர் . தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தன் நடிப்பு திறமையால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் .இவர் பள்ளி பருவத்திலேயே சன்  டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் என்ற தொடரில் நடித்தார் .இது 2004  இல் ஒளிபரப்பு செய்யப்பட்டது .அதற்கு பிறகு தமிழ் ,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி என பல படங்களில் திறமையை வெளிப்படுத்தி இப்பொழுது உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் .

பிரியா பவானி ஷங்கர் :
இவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நல்ல தமிழ் பேசக்கூடிய நடிகை . முதலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ,பின்னர் தொகுப்பாளராக ,அதற்கு பின்  விஜய் டிவியில் 2014 ம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக என அடுத்ததடுத்த கட்டங்களுக்கு சென்று தன் திறமையால் உயர்ந்தவர் .இறுதியில் மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ,மாஃபியா போன்ற பல படங்களில் தன் நடிப்பாலும் ,அழகாலும்,தன் திறமையினாலும் நல்ல தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .

தேவதர்ஷினி :

Devadarshini
இவர் பல்வேறு படங்களில் தன் நகைசுவையாலும் ,தன்னுடைய நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் .முதன் முதலில் மர்மதேசம் என்ற தொடரில் அறிமுகம் ஆனவர் .அதற்கு பின் ரமணி என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் இன்றளவும் ரசிக்க வைக்கிறார் .அண்ணாமலை ,கோலங்கள் ,அத்தி பூக்கள் என்ற பல தொடர்களில் தன் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் .இறுதியாக தானும் ,தன் மகளும் சேர்ந்து நடித்து வெளிவந்த 96  மக்களிடம் பெருமளவு பேசப்பட்டது .

திவ்விய தர்ஷினி 
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான செல்வி ,அரசி ,கோலங்கள் ,அகல்யா ,தடையம் போன்ற பல தொடர்களில் நடித்து ,அதற்கு பின் பல்வேறு நிகழ்ச்சிகளில்  விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் , தன் பேச்சால்  மக்கள் மனதில் இடம் பிடித்தவர் .இப்பொழுது திரைபடங்களிழும் தனக்கேற்ற கதாபாத்திரங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் .

Famous actresses who came to cinema from serials