சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எள்ளுன்னா எண்ணெயா நிற்பார் நம்ம தல அல்டிமேட்! பொன்னம்பலம் புகழாரம் !

சினிமா சண்டை காட்சிகள் முதல் வில்லன் வரை வலம் வந்த நடிகர் பொன்னம்பலம்  சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பின் காரணமாக  கோமா ஸ்டேஜுக்கு சென்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹசான் உட்பட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உதவியால் உயிர் பிழைத்தாக   செய்தியாளர்கள்  சந்திப்பில்  உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதனை தொடந்து நடிகர் அஜித் அவர்கள் உதவி செய்ய முன்வரவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் பொன்னம்பலம் 
அமர்க்களம்  பட பிடிப்பின் பொழுது தனது நண்பரின் மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்வதற்கு 67,000/- ரூபாய் பணம் தேவைப்படுவதாக காலை 9 மணி அளவில் தெரிவித்தேன். மீண்டும் இடைவேளையின் பொழுது நடிகர் அஜித்தை சந்தித்து நண்பர் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை தெரிவித்தேன்.

அதற்கு பதில் அளித்த நடிகர் அஜித்  காலை 11 மணி அளவில் எனது மனைவி ஷாலினி மூலமாக முழு பணத்தை மருத்துவமனையில் செலுத்திவிட்டதாக  தெரிவித்தார். அவர் சொன்ன தகவலை கேட்ட பின் நான் மெய்சிலிர்த்து போனேன். இப்படியும் ஒரு மாமனிதர்  உள்ளார் என்பதை நான் அப்போதுதான் அறிந்தேன்.


எள்ளுன்னா எண்ணெயா  நிற்பது நம்ம தல அல்டிமேட் அஜித் தான்  என்பதை அப்பொழுதே உணர்ந்தவன். என்று நடிகர் பொன்னம்பலம் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய உருக்கமான பதிலை தெரிவித்துள்ளார்.

He was the one who realized then that it is our Thala Ultimate Ajith who stands for sesame or oil. Actor Ponnambalam said in a press conference.