சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிக் பாஸ் சர்ச்சை நாயகி மீரா மிதுன் பரபரப்பு புகார்

பிக் பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பனா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவில் நடிகர் சூர்யா பற்றி அவருக்கு நடிக்கவே தெரியாது சாதாரண காட்சிக்கு கூட  பல டேக்குகள் வாங்குவர். ஆக்ட்டிங்(ACTING) என்ன ஸ்பெல்லிங் என்பது கூட தெரியாது என கடுமையாக விமர்ச்சித்து வீடியோ வெளியிட்டார். 

மேலும் ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் நடிகை திரிஷா தன்னை காப்பியடிப்பதாகவும் அதனை நிறுத்திக் கொள்ளாவிட்டால் த்ரிஷா மீது  சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் விஜய்,சூர்யா ரசிகர்கள் தன்னை போனில் மிரட்டுவதாகவும் ஆபாச செய்திகள்,கொலை மிரட்டல்கள் மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா என்றும் 100க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன என்றும்  தனது மொபைல் எண்ணை சமூக வலைத்தளங்களில்  பரவ விட்டுள்ளனர் என்றும்  எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு.  என்றும் அவர் கூறியுள்ளார். இவர் சூர்யாவுடன்  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss celebrity actress Meera Mithun has complained that Vijay and Surya fans are intimidated