சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் ராணா திருமணத்தில் கட்டுப்பாடுகளா?குழப்பத்தில் சக நடிகர்கள்.

நடிகர் ராணா  லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் 2010-ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார்.அதன் பிறகு நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார்.ஆயினும் இவரை  பாகுபலி படம் தான்  புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. மேலும் அவர் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற  தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான  மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணுக்கும்  திருமணம் முடிவாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 8-ஆம்  தேதி இவர்களது திருமணம் நடைபெற  இருப்பதாக  கூறப்படுகிறது.

கொரோன அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் இவர்களது திருமணம் நிச்சியிக்கப்பட்டதால். திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

raana wedding

மேலும்  திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்களாம். இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், வருண் தேஜ், ராம்சரண் உள்பட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The marriage between actor Rana and Miheeka Bajaj, a businessman from Hyderabad, has ended. Their wedding is said to take place on August 8.