தெலுங்கு படம் மூலமாக 2010 இல் கால் பதித்த நடிகர் ராணா டகுபதி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடுய நடிப்பால் பாகுபலியின் வில்லன் கதாபாத்திரத்தில் தன் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் .இவர் தன்னுடைய காதலியான மிஹீகாவை கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடித்து திருமணம் செய்துள்ளார் .
இவர்களுடைய திருமணம் இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஹைட்ரபாத்தில் மிக பிரமாண்டமாக நடத்த முடியவில்லை என்றாலும் ,மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது .இதில் தெலுங்கு திரையுலக நடிகர்களான வெங்கடேஷ் ,அல்லு அர்ஜுன் ,ராம் சரண் ,நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர் . இவர்கள் திருமணத்திற்கு பல சினிஉலக பிரமுகர்களும் ட்வீட் செய்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர் .
The simplicity of Baghubali villain marriage