சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பட்டைய கிளப்பும் ட்ரெண்டிங் நீங்கள் இல்லாமல் நான் இல்லை

நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலகப் பயணம்  நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு குறித்து இணையவாசிகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
 

1975 ஆம் ஆண்டில் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'அபூர்வ ராகங்கள்' மூலம் திரைக்கு அறிமுகமானார். அபூர்வராகம் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அதன்பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர் ரஜனிகாந்த் .

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சினிமாவில் 45 ஆண்டுகள் ரஜினிக்கு நிறைவடைகிறது. இது தொடர்பாக, ரசிகர்களும் பிரபலங்களும் அந்த நாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக அதன் அறிகுறிதான் இப்பொழுது இருந்தே இணையத்தில் விழாக்கோலம் கண்டுள்ளது .

நடிகர் விவேக் 

45 வருட கலைப்பயணம் !! எவ்வளவு அனுபவங்கள் ! சாதனைகள்! சோதனைகள்! படிப்பினைகள் !! நீங்கள் ஒரு அசாத்தியம் என்று  தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

நடிகர், மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லால்
5 தசாப்தங்கள்! 45 ஆண்டுகள் . இந்திய சினிமாவின் ஒரு முத்திரை நாயகன் என்றும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

அதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு    நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்  திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றினை தெரிவித்த அவர் .வழங்கம்போல் அவருடைய தனி ஸ்டைலில்   " நீங்கள் இல்லாமல் நான் இல்லை "  வசனம் ட்ரெண்ட் ஆகி வருகிறது . 

Bar Club Actor Rajinikanth Today Trending neengal illamal naan illai