என்றும் இனிமை பாடல் , தனிமையில் துணை பாடல், பயணத்தின் போது பாடல் என்றாலே இன்று பலரக்கு நினைவுக்கு வருவது 70,80,90 களில் வந்த பாடல்கள் தான் .
அதில் பெரிய பாதம் பதித்துவந்தவர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். அவர் பாடிய பாடல்களை ரசிக்காத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பாடகருக்கு வந்த நிலை அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தனக்கு கொராணா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தனக்கு சரியாகிவிடும் என்றும் தானே தன் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்.
இன்று காலை வரை அவரின் உடல் நிலை சரியாக இருந்ததாக தகவல் வந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடம் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது, அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Singer spb in serious condition