சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிக்பாஸ் சீசன் 4 இல் புதிய பொலிவுடன் கமல் -வைரலாகும் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் லைவ் ஷோ தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன்  தொகுத்து வழங்கி  வருகிறார்.இதுவரை மூன்று சீசன் முடிந்துள்ளது.    

பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன், ஜூலை மாதங்களில் ஆரம்பிக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது கூடிய விரைவில் பிக்பாஸ் நான்காவது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.kamal

செய்தி வெளியான சூழ்நிலையில்  இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனின் புதிய உருவ தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அதில் கமல் முறுக்கு மீசை மற்றும் வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்,இதனால்  பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு   ரசிகர்கள் மத்தியில் மேலும் கூடுதல்  ஆர்வம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் 4-வது சீஸனும் முந்தய மூன்று சீசனை  விட மிகவும் காரசாரமாகவும் விறுவிறுப்பாகவும்  செல்லும் என கூறப்படுகிறது. ஏனெனில், இதில் வனிதாவின் 3-வது திருமணத்தை குறித்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி ,டிக்டாக்  பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வீட்டில்  முடங்கி இருப்பதால் இந்த வருடம் முந்தய மூன்று சீசன்களை விட பெரிய அளவில் எதிர்பார்க்க படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hosted by Vijay TV, Big Boss Live Show has been well received by the people of Tamil Nadu. The show is hosted by actor Kamal Haasan. So far three seasons have been completed.