சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

OTT- தளத்தில் வெளியாகும் ''சூரரைப் போற்று'' -எப்போது?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இப்படத்தை துரோகம் இறுதிச் சுற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் டெக்கான் உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் சென்ற  மாதம் ஜனவரி 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.

இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அளவுக்கு சூரரை போற்று க்கு  எதிர்பார்ப்பு அதிகரித்த சூழ்நிலையில்  கொரோனா வைரஸ் பரவி  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மேலும் திரை அரங்கங்களும் தேதி அறிவிப்பின்றி மூடப்பட்டது.தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதனால் திரைஅரங்கங்களும் திறக்கப்படாமல் உள்ளது.மேலும்  இதனையடுத்து, சூரரைப்போற்று படத்தை பற்றி தற்போது நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அவர்  தனது நடிப்பிலும் பலரது உழைப்பிலும் உருவான சூரரைப்போற்று திரைப்படம் அமேசானில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும். திரையரங்கில் சூரரைப்போற்று வெளியிடுவதற்கான கால சூழ்நிலை தற்போது இல்லை என்றும் , சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும். இந்த கொரோனா காலத்தில் தன்னலம் பாராமல் உழைப்பவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று அவரது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் நேரடியாக  OTT- தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாகும் எண்பத்தும் குறிப்பிடத்தக்கது ஆகும். 
 

Actor Surya has now posted a statement on his Twitter account about the film