சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

படத்தில் வில்லன்கள், நிஜ வாழ்க்கையில் ஹுரோக்கள்

actors-riyaz-khan-and-babloo-prithviraj-done-a-great-work-in-public
  மீனா   | Last Modified : 25 Aug, 2020 12:19 pm சினிமா செய்திகள்

"அவள் வருவாளா" திரைப்படத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று , வாணி ராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் வந்து மக்களிடையே நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்தவர் திரு. பப்ளூ பிருத்விராஜ் அவர்கள்.

பத்ரி , வின்னர் போன்ற  பல படங்களில் நடித்த நடிகர் திரு.  ரியாஸ் கான் அவர்கள்.  

இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு காணோலியால் இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் ஓர் நல்ல மனிதர்கள் என்று பெயர் பெற்றுள்ளனர். 

சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தம்பதிகள் இருவர் தங்களது குழந்தையுடன் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது இளைஞர்கள் இருவர் வாகனத்தை மறித்து நின்று அவர்களை சீண்டி தகராறில் ஈடுபட்டனர். 

இதனை கண்ட நடிகர்கள் பப்ளூ பிருத்விராஜ் மற்றும் ரியாஸ் கான் அவர்கள் இருவரும் அந்த இனைஞர்களை சமாதனம் செய்து அந்த இனைஞர்களை அனுப்பி வைத்தனர். 

அந்த தம்பதிகளும் தங்களின் குழந்தையுடன் பிரச்சினை இன்றி  வீடு சென்றனர். 

இந்த காட்சி இணையத்தில் பரவலாகி பேசப்பட்டு வருகிறது

Actors riyaz khan and babloo prithviraj done a great work in public