சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு திருமணமா??

pandian-stores-vj-chithra-engagement
  மீனா   | Last Modified : 26 Aug, 2020 02:13 am சினிமா செய்திகள்

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "சட்டம் சொல்வது என்ன " என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகமாகி,  பின் "நொடிக்கு நொடி அதிரடி",  "ஊர் சுற்றலாம் வாங்க " என்ற நிகழ்ச்சிகளில் பயணித்து , "சின்ன பாப்பா பெரிய பாப்பா " , "சரவணன் மீனாட்சி ", "வேலுனாச்சி", "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஆகிய தொடர்களில் வந்து ," ஜோடி நம்பர் ஒன் ", "டான்ஸ் ஜோடி டான்ஸ் " போன்ற நடன நிகழ்ச்சியில் இடம்பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் சித்ரா. 

இவரை ரசிக்காத ஆள் இல்லை என்றே சொல்லலாம்.  இவரின் பெயர் சித்ரா என்பதை மறந்து பலர் முல்லை என்றே அழைத்ததும் உண்டு .

"தில்லானா தில்லானா " , "வென்னிலவே வென்னிலவே " , " காற்றே என் வாசல் வந்தாய் " போன்ற பாடல்களை கேட்டால் பலருக்கும் இப்போது சித்ரா ஞாபகம் தான் வருகிறது.  ஆம் அவர் நடனம் ஆடி கலக்கிய பாடல்கள் எல்லாம் இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு , பகிரப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட சித்ரா அவர்களுக்கு இப்போது அவரின் பெற்றோர் பார்த்து முடிவு செய்யப்பட்ட தொழிலதிபர் ஹேமந்த் அவர்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் அவர் திருமணத்திற்கு பிறகும் தன் நடிப்பை தொடர்வார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

Pandian stores Vj chithra engagement