சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

போதைபொருள் வழக்கில் கைதான நடிகை

famous-actress-arrested-in-drug-case
  பிரேமா   | Last Modified : 09 Sep, 2020 03:01 am சினிமா செய்திகள்

கடந்த சில வாரங்களாக  போதை பொருள் விவகாரம் தொடர்பாக பல சினிமா நட்சத்திரங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர் .அதன் தொடர்பாக ,பல நட்சத்திரங்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர் .

சுஷாந்த் சிங் ராஜ்புட் , தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ,சுஷாந்த் சிங்  முன்னாள் காதலியான  ரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு போதை பொருள் கடத்தல் தொழில் செய்பவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது .இதனை தொடர்ந்து  சுஷாந்த் சிங் ராஜ்புட் குடும்பத்தினர் அவர் மீது போதைபொருள் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டனர் .
அதனை தொடர்ந்து ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் மேலாளர் சாமுவேல் மிராண்டா ,சுசாந்தின் வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .
இதனை தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியும் கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார் .

தற்போது கன்னட திரையுலக பிரபல நடிகை ராகினி திவேதியின்  நண்பர் ரவி ஷங்கரை கைது செய்தனர் .இதனை அடுத்து  நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் .ஆனால் இருவரும் ஆஜராகாத காரணத்தால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

சஞ்சனா கல்ராணி என்பவர் நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது .நிக்கி கல்ராணி டார்லிங் , வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மொட்டை சிவா கெட்ட சிவா ,மரகத நாணயம் ,ஹாரா ஹாரா மஹாதேவகி ,கலகலப்பு 2 ,கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல படங்களில் நடித்தவர் .

Over the past few weeks, many movie stars have been embroiled in a drug scandal.