சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சற்றுமுன் உயிரிழந்தார் பிரபல விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை கலைஞர்

famous-vijay-television-comedian-vadivel-balaji-died-because-of-illness
  மீனா   | Last Modified : 10 Sep, 2020 08:46 pm சினிமா செய்திகள்

கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் சிரிப்பும் நகைச்சுவை உணர்வும் கலந்த நிகழ்ச்சி ஆகும். 

திறமை வாய்ந்தவர்களுக்கு ஏற்ற மிக சிறந்த மேடை இது.  இதில் கலந்து கொண்ட நல்ல கலைஞர்கள் பலர் இன்று பெரிய நிலையில் இருப்பதை நாம் அனைவரும் காணலாம்.  சந்தானம்,  சிவக்கார்த்திகேயன்,  ரோபோ சங்கர்,  மதுரை முத்து,  ஈரோடு மகேஷ் என்ற வரிசையில் பல வருடங்களாக பல மக்களை சிரிக்க வைத்து  மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் திரு. பாலாஜி அவர்கள். 
 
இவரை "வடிவேலு பாலாஜி " என்று சொன்னால் மட்டுமே பலருக்கு அவரை அடையாளம் தெரியும்.  வடிவேலு பாணியில் அவரின் குரல் மற்றும் நடை உடை பாவனை என அனைத்தையும் வடிவேலு மாதிரியே செய்து சிறந்த நகைச்சுவை செய்து வந்தார். 

அதனால் இவரை வடிவேலு பாலாஜி என்று அனைவரும் அழைத்துவந்தனர். 

எவ்வளவு மணி நேர நிகழ்ச்சியாக இருந்தாலும்,  எத்தனை பேர் இருந்தாலும்,  யார் எப்படி பேச்சு கொடுத்தாலும் சரியாக நகைச்சுவையாக கவுண்டர் கொடுத்து நிகழ்ச்சியை சிறப்பாக சிரிக்க வைத்து நடத்துவார். 

அது இது எது என்ற நிகழ்ச்சியை பலரும் "சிரிச்சா போச்சு" என்ற எரு பகுதிக்காகவே பார்த்து வந்தனர். அதில் வடிவேலு பாலாஜி அவர்கள் தான் முக்கிய பங்களிப்பை தந்துள்ளார். 

அப்படிப்பட்ட அவரின் உடல்நிலை சரியில்லாமல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

சற்றுமுன் வந்த தகவல் திரு.  பாலாஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 

வெறும் 42 வயது உள்ள இவர் காலமானது பலரையும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.  பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை இணையத்திலும் தொலைக்காட்சியிலும் தெரிவித்து வந்துள்ளனர்.

Famous vijay television comedian vadivel balaji died because of illness