சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எங்க ஊரு பாட்டுக்காரனுக்கு கொரோனாவா

corona-to-enga-town-singer
  India Border அருண் குமார்   | Last Modified : 18 Sep, 2020 08:46 pm சினிமா செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் 60  ஆயிரம்  பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 5 ஆயிரம் பேருக்கு மேல்   அதிகரித்துள்ளது. இதில் இதுவரையில், 4 ஆயிரம்  பேருக்கு மேல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரம் மேல்  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகரும், முன்னாள் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான ராமராஜனுக்கு கொரோனா தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட கிராமங்களை மையப்படுத்திய கதையில் நடித்து மக்களை மகிழ்வித்த ராமராஜன், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைத்துறையைத் தாண்டி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்த அவர் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

முன்னதாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். அதேபோல் நடிகர் விஷால் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி உள்ளிட்டோரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Ramarajan was admitted to the hospital Corona infection has been confirmed and difficulty in breathing has been reported