விஜய் தொலைக்காட்சியில் மிக பெரிய அளவில் பிரபலமாய் ஒளிப்பரப்பானது பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி தான். அதில் கலந்து கொண்ட அனைவருமே மக்கள் மனதில் நின்றனர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் திருமதி. கஸ்தூரி அவர்கள்.
"அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் " என பாடலில் வந்து மனதை மயக்கிய கஸ்தூரி அவர்கள் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ்ஸில் கலந்து கொண்டதற்கு விஜய் தொலைக்காட்சி தனக்கு சம்பளம் முழுதாய் தரவில்லை என்று தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .
அதற்கு பதிலலிக்கும் முறையில் விஜய் தொலைக்காட்சியில் வந்த பதிவு, " விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பல வருடங்களாக நேர்மையுடன் நடந்து வருகிறது, ஒப்பந்தத்தின்படி சம்பளம் அனைவருக்கும் சரியாக நேர்மையாக வழங்கபட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முழு சம்பளமும் கஸ்தூரி அவர்களுக்கு வழங்கிவிட்டது, ஜி. எஸ். டி தொகை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை அவர் சமர்பித்த பிறகே ஜி. எஸ். டி தொகை மற்றும் வேறு ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதற்கான தொகையும் வழங்கப்படும்" என்று பதில் பதிவு செய்துள்ளது.
Vijay tv didn't offer the salary for big boss show to actress kasthuri