தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அவருடைய காதலர் கௌதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு திரையுலக பிரபலங்கள் ஹனிமூன் செல்வது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் நம்ம காஜல் அகர்வால் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். அதாவது, தற்போதைக்கு ஹனிமூன் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், காஜல் அகர்வால் ஹனிமூன் வேணாம், படம் ஷூட்டிங் தான் முக்கியன் என அவர் எடுத்துள்ள முடிவால் ரசிகர்கள் நெட்டிசன்கள் என அனைவரும் மாப்பிள்ளை சார் ரொம்ப பாவம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்
Leading Tamil and Telugu actress Kajal Agarwal shocked her husband after her marriage