சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்?

கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சக நடிகர்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்றும் தவசி வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருந்தார். அத்துடன் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் உள்ள தவசியின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபசி, சிம்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பண உதவி செய்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தவசியின் உடல்நிலை குறித்து தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். மேலும் சமூகவலைதளங்களில் நடிகர் தவசி நலம்பெற வேண்டி ஏராளமானோர் வேண்டுதல்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி இன்று  காலமானார். அவருக்கு வயது 60. தவசியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor Thavasi, who was treated for cancer at a hospital, passed away today.