நாம் ஒரு ஒருவருக்கும் ஒரு தெய்வம் மீது தீராத காதல் இருக்கும் . அப்படிப்பட்ட தெய்வத்தை வணங்கும் போது நம் உடலிலும் மனத்திலும் ஏதோ ஒரு புது விதமான உணர்வு தோன்றும் அந்த தெய்வீகமான உணர்வு நம்முடைய ஆழ்மனதில் இருந்து எழுவதாகும் .சிலர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவன் மற்றும் பிள்ளையார் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் .அப்படி செல்லும் பொழுது நவகிரங்ககளை வழிபடுபவர்களாக இருந்தால் ,வெறும் நவகிரகங்களை சுற்றி வருவதோடு மட்டுமல்லாமல் ,நவகிரகங்களை வலம் வரும்பொழுது ,ஸ்லோகம் சொல்வதால் நமக்கும் நமது மனதிற்கும் திருப்தி தருவதாக இருக்கும் .
ஒன்பது நவகிரங்களுக்கும் சேர்த்து இந்த ஸ்லோகத்தை, தினமும் காலையில் குளித்து முடித்த பின் கடவுள் படத்தின் முன் நின்று சொல்வதால், நவகிரக தோஷம் விலகுவதோடு, அவர்களின் அருளும் கிடைக்கும் பொழுது வீட்டில் தெய்வீகமும் நிறைந்திருக்கும்.
ஸ்லோகம்:
நவகிரஹ காயத்ரி மந்திரங்கள்
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
சந்திர காயத்ரி :
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
புத காயத்ரி :
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
குரு காயத்ரி :
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
சனி காயத்ரி :
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
நவ கிரகங்களிலேயே சனி பகவான்: வழிபடும் முறைகள்
ராகு காயத்ரி :
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
நவகிரஹ சாந்தி ஸ்லோகம் :
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ
கோவிலில் நவக்கிரங்களை சுற்றி வரும் பொழுதும் ஒன்பது முறை இதில் ஏதோ ஒரு ஸ்லோகத்தை கூறிக் கொண்டே வலம் வந்தால், ஆரோக்கியமும்,செல்வமும் எப்பொழுதும் நிலைத்து இருக்கும் .
Slokam for Navagraham