சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சனி பகவான் கோவிலுக்கு செல்ல வேண்டுமா? கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகத்தில் உள்ள அனைத்து மனித  குலத்தையும் முடக்கியது .மனித குலத்தை மட்டுமல்லாது தெய்வங்களின் சிறப்பு வழிப்படையும் முடக்கியது .அதில் இருந்து இன்னும் மீண்டு வராத சூழ்நிலையில் உலகமே போராடிவருகிறது .அதனை தொடர்ந்து பல கோவில்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வரும் சூழ்நிலையில் ஸ்தாபிக்கப்பட்ட தெய்வ திருத்தலத்திற்கு செல்லும்பொழுது  வணங்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம்.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறுகாரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்டபகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.

3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்தஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ளபுதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ளவான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.  நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய்உற்று பாருங்கள்.எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள்கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தைஅனைத்து தலைமுறையும் அறியவேண்டும்.

எந்த ஒரு ஸ்தாபிக்கப்பட்ட தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது என்றும் பக்க வாட்டில் மட்டுமே நின்று தரிசிக்க வேண்டும்.  அப்டிப்பட தெய்வத்தின் சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்களால் மட்டும் தான் தாங்கும் சக்தி உண்டு என்பது ஐதீகம் .ஆனால் அதற்கு என்ன காரணம் என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது. ஒரு விஷயத்தை நாம் பின்பற்றும் போது காரண காரியங்களை விஷயம் அறிந்த பெரியவர்களிடம் தெரிந்துக் கொண்டு செய்வதோடு நம்முடைய பிள்ளைகளுக்கும் கோவிலுக்கு செல்லும் போது அதை விளக்கிக் கூறினால் அவர்களும் பின்பற்ற உதவும்.

அதே போல் தான் நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயல்பிலேயே அசுபகிரஹனம் என்று சொல்லப்படும் சனி கிரஹத்தின் பார்வை, அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் ,சனியின் பார்வை நம் மீது விழக்கூடாதுஎன்பதால் நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால்,நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால், மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் தரையை நோக்கியபடி படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், ராவணனின் கொடுமைக்குமுடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, ராவணன் சபைக்குவந்து, ராவணன் நவக்கிரகங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில்கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான். தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கவே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது.

ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும் போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, ராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். இதை விட சனிப்பார்வை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. எனவே இனி கோவிலுக்கு செல்லும் போது சனி பகவானை பக்கவாட்டில் இருந்து தரிசித்து சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது.

Want to go to Lord Saturn Saneeswaran Temple thirunallar? Definitely you need to know!! how to worship Lord Saturn saneeswaran