சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆடி மாதத்தை ஏன் புண்ணியக்காலத்தில் முதல் மாதம் என்று ஏன் சொல்கிறார்கள் ? அப்படியென்ன சிறப்பு இருக்கு அந்த மாதத்தில்

தமிழ் மாதங்களில், ஆடி ஒரு பெரிய ஆன்மீக புண்ணிய காலம் மாதம். தமிழ் மாதங்கள் உத்ராயனம் மற்றும் தாஷ்நாயனம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆஷ் முதல் மார்க்காஷி வரையிலான புனித காலம் தான் தஷ்நாயனம். ஆடி மாதத்தில், ஆடி மாதம் ஆடி வெள்ளி, வரலட்சுமி உண்ணாவிரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளம், ஆடி பவர்ணாமி, ஆடி பூரம், ஆடி தபாசு, நாகசத்துர்த்தி, கருடா பஞ்சமி, செவ்வாய் உண்ணாவிரதம் மற்றும் ஆடி ஞாயிறு போன்ற சிறப்பு நிறைந்தவைகள் ஆடி மாதம்.

ஆடி மாதத்தை புண்ணிய காலம் மற்றும் அம்மன் உகந்த மாதம் என்று அழைக்கப்பார்கள்.

பெரும்பான்மையான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள், பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு , கூழ் ஊற்றுதல், வேப்பிலை தோரணம் ,மஞ்சள், அதிலும் அம்மனுக்கும்,பெண்களுக்கும் உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு ஆகும் .

 ஆடி மாதகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து அம்மனுக்கு விரதம் மேற்கொண்டால், அவர்களின் சுமங்கலி பாக்கியம் பெருகும்    என்பது ஐதீக நம்பிக்கை. 

இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆடி மாதம் என்பது கோடைகாலம் முடிந்து சிலுசிலு காற்றோடு சாரல்  ஆரம்பிக்கும் பருவம். 

இந்த ஆடி மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகளும் உள்ளன 
ஆடிப்பட்டம் தேடிவிதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

 ஆடிப் பெருக்கு / தலை ஆடி

ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.   புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர். அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.  சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது. பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள். தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.   சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும். எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள். இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா. ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு.  நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு  ஜீவாதாரமாக விளங்கும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும், இத்திருநாளில்  மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று காவிரி நதிக்கு பூஜை செய்து, சிறப்பு வழிபாடு நடத்துவர். இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு திருமணம் ஆகவும், திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் செழிக்கவும் வழிபாடு நடத்துவர். பெண்கள் புதிய மஞ்சள் பூசிய கயிற்றை கட்டிக்கொள்வர்.

காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் பச்சை வாழை இல்லை இட்டு அதில் காப்பரிசி, கருகமணி, வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை ஆகியவற்றை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.

ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும். இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன. ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது.எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர். பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார். ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும், வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது

ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது. கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவர்.சுருங்கச் சொல்லின் ஆடி மாதத்தில் தனிமனித விழாக்களைத் தவிர்த்து பண்டிகைகள் போன்ற பொது விழாக்கள் சிறப்பாக‌ கொண்டாடப்படுகின்றன

ஆடிச்செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு வீட்டிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.   ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் ஒளவையார் விரதம் மேற்கொள்கின்றனர்.ஆடிச்செவ்வாய் இரவு ஊரில் உள்ள வயதில் மூத்த பெண்மணி தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு   உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து ஒளவையாருக்குப் படைத்து தேங்காய் உடைத்து   ஒளவையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவர்.இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர். இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் நீர் நிலைகளில் செய்யப்படுகிறது. அன்று பித்ருக்களுக்காக மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். பித்ரு பூஜை வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்று பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படுகிறது.வம்சம் தழைக்கவும், சுபிட்ச வாழ்வும் வேண்டி மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

இராமேஸ்வரம், பாபநாசம் போன்ற இடங்களில் பித்ரு பூஜை செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார். இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர். கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.கேப்பை அல்லது கம்பு மாவினைக் கொண்டு கூழ் தயார் செய்யப்படுகிறது. அதனுடன் சிறு வெங்காயம் சேர்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. 

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை நாள் முருக பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்நாளில் , முருகனின் அறுபடை வீடுகளான திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர்  மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில்  சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.  3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாளை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். சைவர்களுக்கு,பார்வதி தேவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட நாள் இது என்ற நம்பிக்கை உள்ளதால், இந்நாளில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகளை நடத்துவர். மேலும் அன்று அம்மனுக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டு அந்த வளையல்கள் கோவில்களுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையலை குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அணிந்துக் கொண்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார்.  அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் நள வருட ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள். பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று கோதையைக் கடிந்து கொண்டு வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார். அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள்,” உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள். எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் ”  என்று கூறினார். இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன. ஆண்டாளை  மன உறுதியுடன்   வணங்கினால்   நினைத்தது நிறைவேறும். தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

ஆடிப்பௌர்ணமி

ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர். ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும். கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது. உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள்.கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 11-ம் நாள் தபசுக் காட்சி நடைபெறுகிறது.

 வரலட்சுமி விரதம் 

சுமங்கலிப்  பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகும். தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் தழைக்கவும்  செல்வம் செழிக்க வேண்டியும் பெண்கள் இவ்விரதம் மேற்கொள்வர். ஒரு கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, ஒரு வெள்ளிக்காசு அல்லது பொற்காசினை இட்டு, மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைத்து, கலசத்தை அம்மனின் முன்பு வைத்து விளக்கேற்றி பொங்கல், பருப்புவடை, பாயசம், கொழுக்கட்டை கொண்டு நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.

ஆடித்தபசு  

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இக்கோயில் அம்பிகை தவமிருந்த அற்புத தலம்.  அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவனும் சங்கரநாராயணராக ஆடிபவுர்ணமியில் காட்சியளித்தார். ஆடித்தபசு என்னும் பெயரில் நடைபெறும் இவ்விழாவில் கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார்.

ஆடி நவராத்திரி

இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் கோடை வெப்பம் முடிந்து காற்றோடு சாரல் மழை பெய்யும். இதனால் அம்மை நோய் பரவும். கேப்பை மற்றும் கம்பு தானியம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.சின்ன வெங்காயம் அம்மை நோய் கிருமியை கட்டுப்படுத்தும். இதனாலே நம் முன்னோர்கள் கோவில்களில் கூழ் தயார் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கின்றனர். இன்றளவும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

In Tamil months, Aadi is a spiritual devotional month.