சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நிறைந்த ஆடி அமாவாசை வழிபாட்டின் ரகசியம் !

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..!
*தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது ..

*சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். .*
அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா்.
கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.

பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் தொந்தரவுகள் ,நோய்கள் ,மன நிம்மதி இன்மை ஆகியவை உண்டாகும்.
இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது.
*அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது..*

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம்.

பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது.
முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.
அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் *வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.*

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி!
ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்..

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும்..*

மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

#அமாவாசை சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.

மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான்.

நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.

*ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

#பித்ரு_லோகம் என்பது ,
சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்..!!

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம்.

இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும்.
மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.

நிறைந்த அமாவாசை

நிறைந்த அமாவாசை அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக வளர்ந்து விருட்சமாய் வளரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அதை உணர்த்தும் மகாபாரத கதை ஒன்றை பார்க்கலாமா? குரு ஷேத்ர போருக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவன். துரியோதனன் போரில் வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று, சகாதேவனைக் கேட்டான். சகாதேவன், மனதில் கள்ளமின்றி துரியோதனன் எதிரியாக இருந்தாலும், கள பலி கொடுப்பது பற்றியும், அதற்கு பூரண அமாவாசை அன்று போரை தொடங்கினால் வெற்றி உறுதி என்றும் கூறினான்.

துரியோதனன் சகாதேவன் குறித்துக்கொடுத்த நேரத்தில் கள பலி கொடுத்து, பூரண அமாவாசை அன்று யுத்தம் தொடங்க ஆயத்தமானான். கிருஷ்ணர் முக்காலமும் அறிந்தவராயிற்றே. சகாதேவன், கூறியது போல் கெளரவர்கள் செய்து விட்டால் வெற்றி அவர்கள் பால் திரும்பிவிடுமே என்று உணர்ந்தார். இதை சரியான வழியில் திசை திருப்ப வேண்டும் என்று நினைத்தார்.

அமாவாசைக்கு முந்தையநாள்  குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய தொடங்கினார். சந்திரனுக்கும், சூரியனுக்கும் ஆச்சரியமாயிற்று. என்னவாயிற்று கிருஷ்ணபகவானுக்கு. நாளைதானே நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் நேரம். அப்படியெனில் நாளை தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவர் இன்று குளக்கரையில் உட்கார்ந்து உரிய சடங்குகளின் படி தர்ப்பணம் கொடுக்கிறாரே என்று நினைத்தார்கள். கையோடு இருவரும் இணைந்து கிருஷ்ண பகவானை நோக்கி வந்தார்கள்.

கிருஷ்ண பகவானே என்ன விளையாட்டு இது? அமாவாசை நாட்களில் அல்லவா தர்ப்பணம் கொடுப்பது முறையாகும். இன்று அப்படியொன்றும் இல்லையே. தாங்கள் இன்று தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? உங்களுக்கே நீங்கள் செய்வது முறையானதாக இருக்கிறதா என்று கேட்டார் கள். 

கிருஷ்ணபகவான் எதுவும் பேசாமல் அவரை பார்த்தார். ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அமாவாசை என்பது என்ன என்று கேட்டார். நானும் சூரியனும் இணைந்து ஒருவரையொருவர் சந்திப்பது அன்று தான் அமாவாசையாக கொண்டாடப்படுகிறது என்றார் சந்திர பகவான். அப்படியானால் நான் செய்தது சரி தான். இன்று தான் அமாவாசை.

நீங்கள் இருவரும் இணைந்து இன்று வந்திருக்கிறீர்கள் அல்லவா? என்றார் கிருஷ்ணர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கிருஷ்ணர் சரியாக மடக்கி விட்டாரே... அவர் சொல்வது போல் இன்று நாம் சந்தித்த நாள் தான் அமாவாசை என்பது சரிதான் என்று நினைத்து ஒப்புகொண்டு திரும்பிவிட்டார்கள். 

நடந்ததை அறியாமல் துரியோதனன் மறுநாள் சகாதேவன் சொன்னபடி பலி கொடுத்தான். ஆனால் அன்று அமாவாசை இல்லை என்பதால் அவனுக்கு வெற்றி வாய்ப்பும் இல்லாமலேபோய்விட்டது. இதனால் நல்லவர்களுக்கான பாண்டவர்களுக்கே வெற்றியும் கிட்டியது. அமாவாசையன்று வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை அன்றே உணர்த்தினார் கிருஷ்ண பகவான்.   

 

The secret of the full moon Audi New Moon worship! The day of the new moon has gained importance in our time ..!