சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நெய்யால் அபிஷேகமாகும் வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோவில்

greatness-of-nei-nantheeswarar-temple-in-vendanpatti
  மீனா   | Last Modified : 07 Jul, 2020 10:47 am ஆன்மிகம் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுக்காவை சேர்ந்தது வேந்தன்பட்டி என்ற கிராமம்.  இங்கே  மீனாட்சி சொக்கநாதர் அருள் புரிந்து வரும் நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நகரத்தார்கள் தொண்டு செய்து வரும் இத்திருக்கோவிலின் சிறப்பே நெய் நந்தி தான்.  சொக்கநாதர் அருள் தரும் அனைத்து இடங்களிலும் நந்தி பகவான் அருள் புரிவார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த தகவலே.  ஆனால் இங்கு அருள் புரியும் நந்தி பகவான் மிக சிறப்பு வாய்ந்த நந்தி ஆகும்.

கொடும்பாளூர் என்னும்  கிராமத்தில் உள்ள மூவர் கோவிலில் இருந்து  கொண்டுவந்து வேந்தன்பட்டியில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி  நெய் நந்தீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது இந்த கோவில். 


பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பிய காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும் தங்களுக்கு குணமடைந்தால் நந்தி பகவானுக்கு நெய்யால் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டினார்கள் என்றும், அவர்கள் உடல்நிலை குணமடைந்த பின்னர் மிகச்சிறப்பாக நெய்யால் அபிஷேகம் செய்ததும் தான் இந்த நெய் அபிஷேகத்தின்  ஆரம்பம் என கூறுகிறார்கள்.

இந்த நந்தியை "தம்பி நந்தி " என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  தஞ்சை பெருவுடையார் திருக்கோவிலில் உள்ள நந்தியை "அண்ணன் நந்தி " எனவும் குறிப்பிடுகிறார்கள். 

இங்கு இருக்கும் நந்தியின் தலையில் உள்ள இரு கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் இருக்கும் அதிசயம் இங்கு மட்டுமே காணக்கூடும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். திருமண தடை,  குழந்தையின்மை ,  தோஷங்கள் உள்ளவர்கள்  அனைவரும் இந்த நந்தீஸ்வரர் கோவிலில் வேண்டிக்கொண்டு நெய் அபிஷேகம் செய்து வருகிறார்கள்.  மாதா மாதம் பிரதோஷ பூஜை வருடா வருடம் வைகாசி விசாகம்,  சிவன் இராத்திரி பூஜை அனைத்துக்கும் நெய் அபிஷேகம் விஷேசமாகும்.  

மாட்டு பொங்கல் அன்று நெய் அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியை அதிரசம் மாலை,  பூ  மாலை,  பலகாரம்  மாலை,  கற்கண்டு போன்றவற்றால் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.

வீட்டில் ஒரு துளி நெய் தவறி சிந்தினாளும் அக்கணமே ஈ,  எரும்புகள் மொய்த்துவிடும்.  ஆனால் பல வருடங்களாக நந்தியின் மேல் ஊற்றப்படும் நெய்க்கு இதுவரை ஒரு ஈ,  எரும்பு அண்டவில்லை என்பதும் சிறு துற்நாற்றம் கூட எழவில்லை என்பதும் தான் மிகச்சிறப்பு. நந்தியின்  மேல் ஊற்றப்படும் நெய்யை யாரும் உபயோகப்படுத்தாமல் அதனை ஒரு "நெய் கிணறு" என்னும் பெயரில் ஒரு தொட்டி கட்டி அதில் ஊற்றி சேமித்து வருகிறார்கள். அந்த நெய்க்கும் ஒரு ஈ,  எரும்பு , துற்நாற்றம் வருவதில்லை என்பதும் சிறப்பு.

நம் முன்னோர்கள் செய்து வைத்த  இந்த அதிசய நெய் நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்பை அறிந்து பல சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Complete celebration of Nei nantheeswarar temple in vendanpatti is ghee in which no odor, no ants itching that ghee for long years.