சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அடடே!! சிலிக்கான் பாக்கெட் களை தெரியாமல் கூட கீழே போட்டுவிடாதீர்கள்

புதியதாக நாம் வாங்கும் செருப்புகள் ,லேப்டாப் ,பேக்குகள் ,ஷூட்கஸ் ஆகியவைகளில்  வெள்ளை நிறத்தில் சிலிக்கான் பாக்கெட் கொடுக்கப்படும் , அப்படி கொடுக்கப்படும் சிலிக்கான் நமக்கு பல விதங்களில் பயன்படுகிறது .

அதனால் அதை தெரியாமல் கூட கீழே வீசிவிடாதீர்கள்.அவை நாம் வீட்டில் என்ன என்ன விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது தெரியுமா?இனியாவது தெரிந்துகொள்ளுங்கள் ,இனியும் கீழே வீசாதீர்கள்.

சமயலறையில் : பொதுவாகவே நம் வீட்டில் சமயலறையில் தான்  ஈரப்பதம் அதிகமாக காணப்படும் அதனால் நாம் வைத்திருக்கும் மசாலா பொருள்கள் சர்க்கரை போன்றவை கெட்டியவதும் ,கெட்டுப்போகவும்  செய்கிறது, இதனை தடுக்க நாம் சிலிக்கான் பாக்கெட் களை பயன்படுத்தலாம் 

எப்படி என்றல் , சிலிக்கான்  ஜெல்  பாக்கெட் களை சமயலறையில்  நாம் வைத்திருக்கும் மசாலா பொருள்கள் பக்கத்தில் ஸ்டிக்கர் போட்டு ஓட்டிவைத்தால் போதும். அப்படி வைக்கும் பொழுது சமயலறையில் உள்ள ஈரப்பத்தினை இந்த சிலிக்கான் பாக்கெட் உறிஞ்சிக்கொள்ளும் மேலும் பொருள்கள் கெட்டுப்போகாமல் பிரெஷ் ஆகா  இருக்கும்.

போன் நீரில் விழுந்தால்: செல்போன் வைத்திருக்கும் அனைவர்க்கும் அடிக்கடி நடக்கும் பிரச்சனை போன் தவறி தண்ணீர்க்குள் விழுவது ,அப்படி நீருக்குள் விழுந்த போனை எடுத்து அதனுள் இருக்கும் பேட்டரி ,மெமொரிக்கார்டு ,சிம் எடுத்துவிட்டு 
 ஒரு கிண்ணத்தில் சிலிக்கான் ஜெல் போக்கெட்களை போட்டு அதனுள் நீரில் விழுந்த போனை வைத்தால் அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சி புதிய போன் போல் மாற்றிவிடும் பின் ஒரு நாள் அந்த போனை காற்றோட்டமாக வைத்துவிட்டு அடுத்தநாள் சார்ஜ் போடுவது நல்லது 

துணிகளை உணர்த்த : நாம் துவைத்த துணிகள் உடனடியாக காயவேண்டுமானால் ஒரு பக்கெட்டில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை போட்டு அதில் துணிகளை வைத்தால் சீக்கரம் ஈரம் உறிஞ்சப்பட்டு  துணி காய்ந்துவிடும் 

கத்தி கூர்மையாக இருக்க : பொதுவாக கத்தி பிளேடுகள் போன்றவை ஈரப்பததால் கூர்மை சீக்கிரமாக இழந்துவிடும் ,அவை கூர்மை இழக்காமல் இருக்க கைதிகள் வைத்திருக்கும் டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்களை போட்டுவைத்தால் பொது அது கூர்மையாகவே இருக்கும்.

நகைகள்: நாம் வைத்திருக்கும் நகைகளை  அடிக்கடி போடுவது கிடையாது அப்படியே பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம் அப்படி வைக்கப்படும் நகைகள் நாள் ஆக ஆக அதன் பளபளப்பு மங்கிவிடும் .அப்படி மங்காமல் இருக்க நகைகள் வைத்திருக்கும் பெட்டிக்குள் இந்த சிலிக்கான் பாக்கெட்களை போட்டுவைத்தால் போதும் நகைகள் மங்காமல் புதுசுபோலவே இருக்கும் 

துர்நாற்றம் : நம்முடைய வீட்டில் பொதுவாக உள்ள பிரச்சனை ஷூ துர்நாற்றம்
நாம் என்ன துவைத்தாலும் சாக்ஸ் மற்றும் ஷூ களில் துர்நாற்றம் வீசும் அதனால் நாம் செருப்பு வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்களை வைத்தால் துர்நாற்றம் வீசாமல் தடுக்கும்.மேலும் நாம் எப்போவாவது பயன்படுத்தப்படும் பொருள்கள் விளையாட்டு  பொருள்கள் போட்டு வைத்திருக்கும் கவர்களில் ஒருவித நாற்றம் வரும் அதை தடுக்க இந்த சிலிக்கான் பாக்கெட் களைஅதில் போட்டுவைத்தால் போதும் 

 முக்கியக்குறிப்பு : இதுபோன்று பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் நமக்கு பயன்படும் ,ஆனால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட் அப்படியே வைக்கவேண்டும்  ஒருபோதும் இதை பிரித்து வெளியே எடுத்து பயன்படுத்தக்கூடாது .

 

 

This silicone gel can be used by us in a variety of ways, but this silicone gel pocket should be kept intact and should never be taken apart.