சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நல்ல கொலஸ்ட்ராலை எப்படி உடம்பில் அதிகரிப்பது ?

how-we-can-increase-good-cholesterol-in-our-body
  பிரேமா   | Last Modified : 11 Jul, 2020 03:53 pm ஆரோக்கியம்

நல்ல கொலஸ்ட்ராலை எப்படி உடம்பில் அதிகரிப்பது,

அது என்ன  கொலஸ்ட்ராலில்  நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்டரால் என்று உள்ளதா ? கொலஸ்ட்ரால் என்றாலே  கெட்டது தானே என்று தானே யோசிக்கிறிங்க .கண்டிப்பா உண்டு எளிதாக சொல்லவேண்டுமானால் உடலில் தேவையற்ற கொழுப்பு கெட்ட கொல்லஸ்ட்ராலாகவும் ,உடலுக்கு தேவையான கொழுப்பு நல்ல கொலஸ்ட்ராலாகவும் உடலில் சேர்கிறது .


நம்மில் பலபேர் ஆண்களோ, பெண்களோ திருமணத்திற்கு பின் எடை கூடுவதுண்டு.பெண்களின்  எடை குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது .தகுந்த உடற்பயிற்சியினாலும் ,உணவு பழக்கங்களினாலும் உடல் எடையை சீரான நிலைக்கு கொண்டு வர முடியும் .ஆண்கள் எடை கூடுவது உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றத்தால் பலர் எடை கூடுகின்றனர் சிலர் அதே உடல் வாகுடன் இருப்பதுண்டு .

முதலில் நாம் உண்ணும் உணவு நமக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ,உடலுக்கு தேவையான சக்தியை தருகிறதா என்று பார்க்க வேண்டும் அதாவது நாம்  நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கும்  , மூளையானது மந்தமில்லாமல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும் .உண்ணும் உணவு உடலுக்கு தேவையான கலோரியை தரும் அளவு எடுத்துக்கொண்டாலே போதுமானது .தேவைக்கு அதிகமான கலோரியை எடுத்துக்கொள்ளும்  போது தான் மந்தநிலை ,எந்த ஒரு செயலிலும்  ஈடுபாடும் , நாட்டமும் இல்லாமலால் இருப்பது போன்ற பிரச்சனை உருவாகிறது .

கெட்டக்கொழுப்பு உடம்பில் எவ்வாறு சேர்கிறது என்பது அனைவரும் அறிந்ததே .தேவையற்ற கொழுப்பு எப்பொழுது எல்லாம் உடலில் சேர்கிறது அப்பொழுது எல்லாம் கெட்டக்கொழுப்பாக மாறுகிறது .இவ்வாறு கெட்டக்கொழுப்பாக மாறும் பொழுது சர்க்கரை நோய் ,இரத்தக்கொதிப்பு ,இரத்த கொழுப்பு போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது .

கெட்டக்கொழுப்பை குறைக்க உடம்பிற்கு தேவையான நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் .கொழுப்பு நம் உடலிற்கு தேவையான ஒன்று .கொழுப்பில் கரையும் அமிலங்கள் ,கொழுப்பில் கரையா அமிலங்கள் என இருவகை உண்டு .சில வைட்டமின்கள் நீரில் கரையக்கூடியவை .சில வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை .இந்த கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது .சிறுகுழைந்தைகளுக்கு கொழுப்பு மிக அவசியம் .ஆனால் பெரியவர்களுக்கு குறிப்பிட்டளவு இருந்தால் போதுமானது .

1 .தேங்காய் பாலில் மோனோலாரின் அதிகம் இருப்பதால் நமக்கு தேவையான நல்ல கொழுப்பை உடலுக்கு தருகிறது  .
2 .தேங்காய் எண்ணெய் உடலிற்கு பலவிதங்களில் உதவுகிறது .வயிற்றுப்புண்  ஏற்படாமல் பாதுகாக்கிறது .இதயநோய் வராமலும் பாதுக்கப்பதாக இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .
3 .கிவி மற்றும் அவகேடோ(வெண்ணை பழம்) என்னும் பழத்தில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக கிடைக்கிறது .வெளிநாடுகளில் பலரும் நாள்தோறும் இதை எடுத்து கொள்கின்றனர் .
4 .கிரீன் டீ யில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது .
5 .பாதாம் மற்றும் வால்நட் தினமும் 4 அல்லது 5  எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகபடுத்தலாம் .
6 .முளைகட்டிய பயறுவகைகள் சாப்பிடுவதன் மூலம்  நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தலாம் .
7 .ராஜ்மா போன்ற பீன்ஸ் வகையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது .
8 .மீன் வகைகளிலும் ,நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்கின்ற பூண்டிலும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது .
 நாம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகம் எடுத்துக்கொள்வதன் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியும் .
இவை அனைத்திற்கும் மேலாக நல்ல நடைப்பயிற்சி செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த முடியும் .
  


 

when we eat good cholesterol food we can reduce our bad cholesterol .