சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உங்க குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவர்களா நீங்கள் அப்போ நீங்கள் இதை பற்றி தெறிந்து கொள்வது அவசியம்

இல்லத்தின் இன்பமே.. மழலையின் புன்னகையே..

மழலை பிறந்த நொடி முதல் 3-4 வயது வரை சிறுநீர் மற்றும் மலம்  கழித்தல் பற்றி குழந்தைகள் அறியாமலும், அறிந்தாலும் சொல்ல தெரியாமல் இருப்பார்கள். நம் முன்னோர்கள் இதற்க்கு வேஷ்டி துணி , காட்டன் சேலை துணி , காடா துணியை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் அது பார்ப்பவர்களையும் சுற்றி இருப்பவர்களையும் முகம் சுளிக்க வைத்தது. எங்கு சென்றாலும் அம்மாக்கள் அந்த துணிகளை சுமந்துகொண்டே இருக்கும் நிலையில் தள்ள பட்டனர்.  அதற்க்கு மாற்றாக வந்தது தான் டயாபர்ஸ். குழந்தைகள் சிறுநீரோ  மலமோ கழித்தல் அது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்காமல் ,சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்.

இந்த டயாபர்ஸை அணிந்துவிட்டால் குழந்தைகள்  எப்போது சிறுநீர் , மலம் கழித்தது என்று வெளியில் தெரியாது. அதை கழட்டி குப்பையில் வீசிவிட்டு சுலபமாக குழந்தையை சுத்தம் செய்துவிடலாம், துவைத்து உளரவைத்து எடுத்து வைக்கும் வேலை எதும் இல்லை . கடையில் வாங்கி அணிந்துவிட்டு பின் வீசினால் வேலை முடிந்தது. வேலைக்கு செல்லும் அம்மாக்கள், உதவிக்கு ஆள் இல்லாத அம்மாக்கள் , பட்டு செலை அணியும் நேரம் மட்டும் என தொடங்கி இப்போது பிறந்த நொடி முதல் எந்நேரமும் அணியும் நிலைக்கு தள்ளப்பட்ட்து குழந்தை . ஆனால் ஒரு நாள் முழுக்க அதை அணிந்த குழந்தைகளுக்கு பல விதமன பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிறைய உள்ளது இந்த டயாபர்களில்.

காற்று படாமல் அடைப்பதால் பல சருமம் சம்பந்தப்பட்ட தொற்று, மூளை வளர்ச்சி குறைபாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் நிறைந்தது இந்த டயாபர்ஸ்கள். அது மட்டுமல்லாமல் ஒரு டயாபர் மக்க 500 வருடங்கள் ஆகுமாம்.அதில் கலக்கபடும் ரசாயன்ங்கள் சுற்றுசூலழை மாசு படுத்துபவை ஆகும்.

இந்த நிலையில் இருந்து விடுபடவே தற்போது இளைய தலைமுறை அம்மாக்களிடையே வலம் வருகிறது இந்த துணியால் ஆன டயாபர்கள். ஆம் அது துவைத்து மறுபடியும் உபயோகிக்கலாம்.. துணி என்பதால் குழந்தைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஒரு துணி டயாபர்  ஒரு முறை வாங்கினால் அதையே 0-3 வயது வரை உபயோகிக்கலாம். அதற்க்கு ஏற்றவாறு நிறைய பட்டன்களும், எலாஸ்டிக்கும் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை உபயோகித்து தூக்கி வீசும் டிஸ்போஸபுள் டயாபர் 3 வயது வரை வாங்குவதும் , ஒரு முறை வாங்கி 3 வயது வரை உபயோகிக்கப்படும் துணி டயாபர்கள் வாங்குவதையும் ஒப்பிட்டு பார்த்தால் துணி டயாபர்களுக்கு செலவு குறைவாகும். சுற்றுசூழலும் மாசு படாமல் பாதுகாத்துகொள்ளலாம். நம் அடுத்த சந்ததியினறை ரசாயனத்திலும் பல்வேறு உடல் பதிப்புகளில் இருந்தும் காப்பாத்தலாம்.

தற்போது இந்த டயாபர்கள் ஆன்லைனிலும் , தமிழ்நாட்டில் சென்னை , கோயம்பத்தூர்  போன்ற பெரு நகரங்களிலும் சுலபமாக கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் சிறு நகரங்களிலும் கிடைத்துவிடும். பல மருத்துவர்களும் இதையே உபயோகிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.  அடுத்த சந்ததியினறை காக்க முயற்சிப்போம் 

comparison of cloth diapers versus disposable diapers