சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிறந்த குழந்தையை கொரோனா காலத்தில் எப்படி பராமரிக்கலாம்?

பிறந்த குழந்தையை இப்படிப்பட்ட கொரோனா காலத்தில் வளர்ப்பது தான் மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே .இப்படி ஒரு காலகட்டத்தில் வளர்ப்பதற்கு என்னென்ன முறையை பின்பற்றலாம் என இங்கு பார்க்கலாம்.கருவில் உள்ள குழந்தை கதை கேட்டதாக சொல்லப்படும்போது வெளியே வந்த உயிருக்கு நம்மை சுற்றிலும் எத்தனை உறவுகள் உள்ளதை என்பதை அறியும் போது அதன் மனதில் நம்பிக்கை உருவாகும் .


தாய் பாலின் அவசியம் :
குழந்தைக்கு முதலில் கொடுக்கவேண்டியது தாய்ப்பால் .தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன . நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் உடலில் தேவையற்ற கழிவுகள் தங்காமல் இருக்கவும் தாய்ப்பால் மிகவும் அவசியம் .தாய்ப்பால் ஒரு வருடமாவது கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்குமே நல்லது.தாய்ப்பால் அதிகமாக  சுரக்க தினமும் 10 பல் பூண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும்.சுரைக்காயை வேகவைத்து சாப்பிடுவதன் மூலமும் தாய்ப்பால் சுரக்கும்.பால்சுறா ,கருப்பட்டி இவற்றை உண்பதன் மூலமும் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .


மூன்று மாத குழந்தைக்கு :

ஒரு இரண்டு தேக்கரண்டி கேழ்வரகு தானியத்தை ,இரவு ஊறவைத்து காலையில் மிக்சியில் அரைத்து பால் எடுத்து ,அதை  கஞ்சியாக காய்ச்சி தருவதன் மூலம் குழந்தைக்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும் .குழந்தையும் ஆரோக்கியமாகவும் ,கொழு கொழுவெனவும்  இருக்கும்.காலையில் மலம் சம்பந்தமான பிரச்னையும் குழந்தைக்கு வராது . இதனை தினமும் குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வேலை குடுத்து வரலாம் .


ஆறு மாத குழந்தைக்கு :
கருப்பு உளுந்து ,பச்சை பயறு ,பொரிகடலை ,சிவப்பு அவல் இவை அனைத்தையும் நன்கு வறுத்த பின்பு மாவாக்கி அதையும் சலித்துவிட்டு அந்த மாவை கருப்பட்டி சேர்த்து காய்ச்சி கஞ்சியாக அடிக்கடி கொடுக்கலாம்.அளவு மிக அவசியம் .கீரை வேகவைத்த தண்ணீர் (அரைக்கீரை),பருப்பு வேகவைத்த தண்ணீர் ,சீரகம் ,கருவேப்பிலை,மல்லி (தனியா),புதினா ,ஆகியவை வேகவைத்த தண்ணீர் குழந்தைக்கு மிகவும் நல்லது.


வேக வைத்த ஆப்பிள் ,கேரட்,உருளைக்கிழங்கு இவற்றையும் குடுத்து வரலாம்.ஒரு வயது வரையில் எளிதில் ஜீரணமாகும் உணவை தேர்வு செய்யுங்கள் .காய்கறி வேகவைத்த தண்ணீரை எடுத்து சூப்பாக குடுத்து வர குழந்தைக்கு அனைத்து காய்கறிகளின் சுவை பழகி விடும் அதனால் ஒருவருடத்திற்கு பின்பு உணவு கொடுப்பது சுலபமாகிவிடும்.


ஒரு வருடத்திற்கு பின்:

குறிப்பாக ஒரு வருடத்திற்கு பின் தேன் கொடுக்க ஆரம்பிக்கலாம் .தேன் குடுத்து வருவதன் மூலம் குழந்தை எளிதில் பேச தொடங்கும் என்று சொல்வது நம் மரபு.அதேபோல் குழந்தைக்கு உணவை திணிக்க கூடாது .கிண்ணத்தில் உணவு மிச்சம் ஆகக்கூடாது என்று என்னும் நீங்கள் அதை அனைத்தும் திணித்தால் குழந்தை வயிறு என்னவாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குழந்தைக்கு நிறைய  பழங்களை,காய்கறிகளை கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான நார்சத்து கிடைப்பதுடன் வைட்டமின் சத்துக்களும் கிடைக்கிறது.ஒரு வருட குழந்தைக்கு கருப்பு உளுந்து மற்றும் பனைவெல்லம் சேர்த்து லட்டு செய்து தரலாம் .கீரை சாப்பிடாத குழந்தைக்கு இட்லி ,தோசை மாவில் கீரையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாக கொடுக்கலாம் .ஒரு வருடத்திற்கு மேல் கண்டிப்பாக குழந்தைக்கு பேரிச்சம் பழம்,அத்திப்பழம் இவைகளை நாள் ஒன்றுக்கு 2  (அ)3 ஆக கொடுத்து வரலாம்.

ஒரு வருடத்திற்கு மேல் குழந்தையின் தாய்ப்பால் அளவு குறைந்து வருவதால் நாம் அதற்கு தேவையான மற்றும் இணையானவற்றை கொடுத்து வரவேண்டும் .இல்லையென்றால் குழந்தையின் இரும்புசத்து குறைந்து எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது .நட் வகைகளை தினமும் குழந்தைக்கு கொடுத்து வருவதன் மூலம் மூளை வளர்ச்சி துரிதம் அடைகிறது .அதிலும் வால்நட்,பாதாம்,முந்திரி, உலர்திராட்சை  மிகவும் அவசியம் .

 

Everyone knows that it is very difficult to raise a newborn in such a coronation period.what are the things we can follow to grow a newborn baby .