சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வாக்கர் உபயோகிப்பதால் இவ்வளவு விளைவா??

எழுந்து நிற்க தொடங்கிய குழந்தைக்கு நடை பழக ஆரம்பிக்க நடை வண்டி தந்து ஊக்குவிப்பது நம் வீடுகளில் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்ச்சி ஆகும். 

முன்பெல்லாம் மரத்தால் செய்யப்பட்ட நடை வண்டி தான் இருந்தது.  பிறகு இரும்பில் இருந்தது. பிறகு பிளாஸ்டிக் என உருமாறி இப்போது பலவிதமாய் வகை வகையாய் வித விதமாய் இருக்கிறது. வீட்டில் குழந்தையோடு  தாய் மட்டும் இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வாறு நடை வண்டிக்குள் குழந்தையை வைத்து விட்டு  அதற்கு பொழுதுபோக்காக பல வண்ணங்களில் காட்சி பொருளும்,  பாட்டுகளும்,  வண்ண விளக்குகளும் இருக்கிறது.  குழந்தை பாதுகாப்பாக உள்ளே இருக்கும் சுற்றி 4 சக்கரம். அதனுள் நின்று கொண்டு நடக்க முயற்சி செய்து நடை பழகிகொள்ள எளிமையான முறையில் நிறைய வித்யாசமாய் வந்துவிட்டது. 

வேடிக்கை என்னவென்றால் கணக்கீடு செய்யப்பட்ட போது நவீன நடை வண்டியில் இருந்த குழந்தை தானாக நடக்க தாமதம் ஆகிறது என்று வந்துள்ளது.  காரணம் குழந்தைகள் அதில் நடக்காமல் உக்காந்து கொண்டு வண்ண விளக்குகளையும் ,பாட்டுகளையும், காட்சி பொருட்களையும் விளையாடி நடக்காமல் இருப்பதாகவும்,  காலை தரையில் உந்தி வண்டியை தள்ளிவிட்டு காலை தூக்கி கொண்டு ஊஞ்சல் போல் வண்டியை உபயோகித்து விளையாடுவதாகவும்,  அதில் உந்தி உந்தி கட்டைவிரல் மட்டும் தரையில் பட்டு மீதி உள்ளங்கால் மற்றும் இதர விரல்கள் யாவும் தரையில் நடக்க செயல் படாமல் இருந்ததாகவும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது .

கன்னட நாடு இதை விற்பனை செய்வதை தடை விதித்துள்ளது.  காரணம் அந்நாட்டில் சிறு குழந்தைகள் அதில் வேகமாக விளையாடி விழுந்து,  படிகட்டுகளில் விழுந்து இறந்துள்ளது . அதனால் இதை தடை செய்யப்பட்டது. மேலும் அமெரிக்க நாடுகளிலும் குழந்தை நல மருத்துவர்கள் இதை உபயோகிக்க வேண்டாம் என்றே பெற்றோர்களுக்கு அறிவுறுத்து வருகிறார்கள்.  இன்னும் பல நாடுகளில் இதை தடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதில் குழந்தைகள் சீக்கிரம் நடை பழகுவார்கர் என்னும் நினைப்பை உடைக்கும் அளவிற்கு இதை உபயோகிக்கும் குழந்தையின் வளர்ச்சி பின்தங்கி உள்ளதாகவும்,  இதை உபயோகிக்கும் குழந்தைகள் தான் தாமதமாக நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.  மேலும் குழந்தைகள் முன்னங்கால் தான் வளர்ச்சி அடைகிறது பின்னங்கால் வளர்ச்சி பின்தங்கியுள்ளது எனவும் தகவல் வெளிவந்துள்ளது .

இதில் வேகமாக பயணித்து ஆபத்தான பொருட்களுக்கு குழந்தைகள் சுலபமாக சென்றுவிடுகிறார்கள் என்பது அதிர்ச்சிக்குள்ளான தகவல் ஆகும் .

சக்கரம் இல்லாமல்  6-8 மாத குழந்தைகள் வெறும் உக்கார மட்டும் உபயோகிக்கும் மாறு பல வித நாற்காலி வடிவத்தில் கிடைக்கும் அந்த பொருளில் அம்மாக்கள் குழந்தையை பெல்ட் போட்டு பாதுகாப்பாய் வைத்துக்கொண்டு தன் வேலைகளை கவணிக்கலாம். 8 மாதத்திற்கு பிறகு தானாய் எழுந்து நிற்க முயற்சிக்கும் குழந்தைக்கு நம் பழங்கால நடைவண்டி தரலாம்.  அதே நடை வண்டி நவீன முறையில் தள்ளிக்கொண்டு போகும் வண்டி ப்ளாஸ்டிக்கில் வருகிறது அதுவும் உபயோகிக்கலாம். 

நடை வண்டி இல்லாமல் பெரியவர்கள் கை பிடித்தே குழந்தைகளுக்கு நடை பயிற்சி தரலாம் என்று பல ஆய்வுகளின் முடிவு ஆகும்.

Importance of traditional walker