சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தாய்ப்பால் தானம் பற்றி தெரியுமா உங்களுக்கு

milk-donation
  மீனா   | Last Modified : 05 Aug, 2020 02:47 pm ஆரோக்கியம் குழந்தைகள் நலம்

கண் தானம்,  இரத்த தானம்,  உடல் உறுப்புகள் தானம் என பல்வேறு பட்ட தானங்கள் இப்போது உலகமெங்கும் நடக்கிறது. இப்போது அதில் தாய்ப்பால் தானமும் மிக சிறப்பாக நடந்து வருகிறது. 

பிறந்த குழந்தைக்கு தாய்யின் மார்பில் இயற்கையாகவே சுரக்கும் பால் தான் தாய்ப்பால்.  இது சுலபமாக சிலருக்கு சுரந்தாலும் பலருக்கு சிரமமாக இருக்கிறது தற்போது.  ஆனால் பல குழந்தைகள் தாய்ப்பால் இன்றி என். ஐ. சி. யூ என சொல்லப்படும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தவித்துவருகின்றர். அந்த குழந்தைகளுக்கு  2 மணி நேரத்திற்கு ஒரு முறை 10-20மில்லி லிட்டர் தந்து அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிரிக்கவைத்து , உயிர்காக்கும் கவசமாக செயல்படுவது இந்த  தானமாக வந்த தாய்ப்பால் தான்.  பெற்ற தாய்யிடம் பால் சரியா சுரக்க வில்லை என்றால் வாடகை தாய்ப்பால் என்று முன்னோர்கள் காலத்தில் வேறு ஒரு பாலுட்டும் தாயிடம் கடன் வாங்கி தருவது நம் வழக்கத்தில் இருந்து கொண்டு வந்துள்ளது.  அது இப்போது தாய்ப்பால் தானம் என்று செயல்பட்டு வருகிறது. 

இரத்த தானம் ஆங்காங்கே கேம்ப் மாதிரி நிகழ்சிசி மாதிரி நடப்பது போன்று தாய்ப்பால் தானமும் நடக்கிறது.  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உரிய இடங்களில் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் தன் பாலை வெளியே எடுத்து சரியாக பராமரித்து அவர்களிடம் கொடுக்க வேண்டும்.  பின் அதனை நன்கு பராமரித்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சரியாக சேர்த்து விடுவார்கள் அதற்கான குழு. 

இதை மிக உற்சாகத்துடனும்,  ஊக்குவிக்கும் வகையிலும் சென்னையை சேர்ந்த திருமதி. கௌசல்யா ஜெகதீஷ் என்ற தாய்ப்பால் ஆய்வாளர் , அவர்கள் சிறப்பாக நடத்தியுள்ளார.  இவர் ஓர் தமிழ் யூடியூப் சேனல் துவங்கி அதில் தாய்ப்பால் பற்றியும்,  தாய்மார்களின் பராமரிப்பு பற்றியும்,  குழந்தை வளர்ச்சி பற்றிவும் காணோலியாக பதிவிட்டு வந்தார்.  பின் சந்தேகம் கேக்கப்படும் தாய்மார்களுக்கு சுலபமாக இருக்க முகநூலில் ஓர் குழு துவங்கினார்.  இந்த குழு மற்ற குழுக்களை போல அரட்டை அடித்தும்,  புகைப்படங்கள் மறறும் அநாவசியமான கருத்துக்கள், காணோலிகளை பதிவிடும் குழு அள்ள.  உலகமெங்கும் பரவி இருக்கும்  தமிழ் தாய்மார்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டும்,  தன் குழந்தை வளர்ப்பிலும்,  தாய்ப்பால் பயணத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தெரிவித்து அதற்கான தீர்வையும் கண்டறியும் ஓர் சிறந்த குழுவாக செய்ல்பட்டு வருகிறது. 

அந்த குழுவில் தாய்ப்பால் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பல தாய்மார்களை தானே முன்வந்து தாய்ப்பால்  தானத்தை செய்ய வைத்துள்ளார்கள்.  இதில் நேராக வந்து தானம் செய்ய முடியாமல் , அந்த நாளில் தான்னால் முடியாமலும்,  ஆனால் ஆர்வம் இருக்க கூடிய அம்மாக்கள் மருத்துவர்கள் ஆலோசனைபடி தாய்ப்பாலை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த தாய்ப்பாலை வாங்கி அதனை உரிய தாய்ப்பால் வங்கியில் சேர்க்கும்படி அந்த குழு உறுப்பினர்கள் மற்றும்  பல சமூக சேவையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் செய்துவந்து கொண்டிருந்தார்கள். 

அதும் இந்த கொரோனா நேரத்தில் அசோக் எனப்படும் கல்லூரி மாணவனும் அவரின் சமூக சேவை குழுவும் சிரமம் பார்க்காமல் இந்த வேலை செய்துள்ளார்கள்.  

இது பல குறைமாத குழந்தைகள், எடை குறைவாக பிறந்த குழந்தைகள்,  தாய்யால் தாய்ப்பால் தரமுடியால் இருக்கும் குழந்தைகள் என பல குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தங்க திரவமாக இருக்கிறது. 

தாய்ப்பால் தானம் செய்வதால் தன் குழந்தைக்கு பற்றாமல் போய்விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.  கொடுக்க கொடுகாக சுரக்கும் என்றும் ஆலோசிக்கின்றனர் அவர்கள். 

இவர்களின் 1.5 ஆண்டு செய்த சேவையில் 300 லிட்டர் தாய்ப்பால் சேர்ந்து தானமாக வந்துள்ளது.  இது பல குழந்தைகளின் உயிரை காத்து ,எதிர்ப்பு சக்தி அதிகரித்து , பல்வேறு நோய்களில் இருந்து காத்து அவர்களை பாதுகாக்கும். 

இதனை நடைமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல அம்மாக்களை தானாக முன் வந்து தானம் கொடுக்க வைத்த திருமதி. கௌசல்யா ஜெகதீஷ்,  திருமதி. கொராணா நேரத்தில் உதவிய கல்லூரி மாணவர் திரு. அசோக்  ஆகியவர்களுக்கு சென்னை எக்மோரில் உள்ள தாய்ப்பால் வங்கி,  குழந்தை நல நிறுவனத்தில் பெருமை படுத்தும் விதமாகவும்,  உற்சாக படுத்தும் விதமாகவும் விருது வழங்கினர்.

Breastmilk donation