சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஸ்ஸன் என்றால் என்ன ?

what-is-post-partum-depression
  பிரேமா   | Last Modified : 07 Aug, 2020 05:51 am ஆரோக்கியம் குழந்தைகள் நலம்

போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஸ்ஸன் இதை பற்றி பலருக்கு தெரிவதும் இல்லை .பலர் இதை பற்றி வெளிப்படையாக பேசப்படுவதும் இல்லை .இதை பற்றிய பெரிதளவு புரிதல் இல்லாமையே இந்நோய் ஏற்படுவதற்கு காரணம்.

ஒரு ஒரு பெண்ணும் தன்னுடைய  மகப்பேறு காலத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகளை மேற்கொள்கிறார்கள் .அதாவது ஒரு பெண் திருமணம் என்ற புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து பல இன்னல்களை தாண்டி ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் .அவர்களுக்கு தகுந்த  சூழலை ஏற்படுத்தி குடுத்து அவர்களுக்கு மனநிம்மதியையும் சந்தோஷத்தையும்  தருவது அந்த குடும்ப நபர்களின் கடமையாகும் .

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனசோர்வு ஆனது அந்த குழந்தையை மிகுந்த அளவு பாதிக்கிறது .குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களில்  அனைவரும் இந்நோயின் ஆரம்ப நிலைக்கு தள்ளப்படுகின்றனர் .இதில் சிலர் அவரவர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மனசோர்விலிருந்து மீண்டு வர முயற்சிக்கின்றனர் .பெண்களில் 40% பெண்கள் பிரசவத்திற்குப் பின்  மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் .  சில பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் .இதுவே சிலகுழந்தைகள் முதலில் எந்த பிரச்சனை இன்றி பிறந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலால் குழந்தை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .

ஒரு பெண்ணானவள் ஒரு குழந்தை பெற்று எடுப்பது என்பது இப்பொழுது அவ்வளவு சாதாரண விஷயமாக இருப்பதில்லை .மாறிவரும் காலகட்டங்களில் எத்தனையோ விஷயம் அந்த பெண்ணின் மனஉளைச்சலை மாற்றும் சூழல் இருந்தாலும் அந்த பெண்ணிற்கு மிகவும் உறுதுணையாக எதிர்பார்ப்பது தன் கணவனையே .சில பெண்களுக்கு பிரசவ காலத்திலும் ,பிரசவத்திற்கு பின்னும் ஏற்படும் மன அழுத்தத்தால் அவர்களுக்கு தாய்ப்பால் கூட சுரப்பதில்லை என்று தாய்ப்பால் குறித்து ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர் .

அடுத்தவர்கள்  எத்தனை மன வேதனைகளை குடுத்தாலும் அந்த பெண்ணிற்கு கணவன் பக்க பலமாக இருந்தால் அந்த பெண்ணால் இந்த நோயில் இருந்து வெளிவர முடியும் என்று மருத்துவர்கள்,மனநல வல்லுனர்களும் கூறுகின்றனர் .இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து அந்த பெண்ணின் கணவன் அந்த பெண்ணை கவலையில் இருந்தும் ,மன அழுத்தத்தில் இருந்தும்  மீள செய்தால் இந்நோயானது  இது சிறிது மாதங்களில் காணாமல் போய் விடும் .

அதை கவனிக்காமல் விட்டால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி பிறகு பல்வேறு மாத்திரைகளை எடுக்ககூடும் .இதனால் தாய்பால் குடிக்கும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது .இந்நோயால் சிலர் தற்கொலைமுயற்சிக்கு கூட செல்வதாக கூறுகின்றனர் உளவியல் வல்லுநர்கள் .

  
 

Many people do not know about Postpartum Depression .Many people do not talk openly about it.