சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குழந்தைகளின் நினைவாற்றலை இயற்கை முறையில் எவ்வாறு அதிகரிக்கலாம் ?

how-to-increase-children-s-memory-naturally
  பிரேமா   | Last Modified : 14 Aug, 2020 04:42 am ஆரோக்கியம் குழந்தைகள் நலம்

குழந்தையின் நினைவாற்றலை  10 வயது வரை மிக வேகமாக அதிகரிக்க முடியும் .காரணம் ஒரு குழந்தையின் மூளை 2  வயதில் இருந்து வளர்ச்சி அடைய ஆரம்பமாகிறது .அதனால் தான் ஒரு குழந்தை பிறந்து அதன் 2 வயதில் இருந்து  இந்த உலகை புரிந்து கொள்ள பழகுகிறது அதற்கு பார்ப்பவை அனைத்தும் இது என்ன? அது என்ன ? என்ற கேள்வி கணைகளை எழுப்புகிறது .சொல்லி தருபவற்றை எளிதாக உள்வாங்கி கொள்கிறது .ஒரு குழந்தையின் 5 வயது வரை ஒரு விதமான வளர்ச்சி மற்றும் 5  வயதில் இருந்து 10 வயது வரையில் ஒரு விதமான வளர்ச்சி இருக்கும் .

அதனால் தான் நம் முன்னோர்களும் , பெற்றோர்களும் சொல்வதை கேட்றிப்போம் .5  இல் வளையாதது 50 இல் வளையாது என்று .ஒரு குழந்தை 5 வயது முதல் ,நன்றாக அவர்களுக்கு அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று  ஆராயிச்சியாளர்கள் கூறியுள்ளனர் .

ஒரு குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க பல்வேறு மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை .ஒரு ஒரு குழந்தையும் அதற்கென்று சில திறமைகளை  கொண்டிருக்கும் . உதாரணமாக ஒரு குழந்தை ஓவியத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும் .மற்றொரு குழந்தை இசை மற்றும் கலைநுணுக்கத்தில்  ஆர்வம் அதிகம் இருக்கலாம் .இது போன்று கணிதம் ,அறிவியல் ,விளையாட்டு மற்றும் ஆளுமை திறன் என்று ஒரு ஒரு குழந்தையும் வெவ்வேறு தனி சிறப்பை கொண்டிருக்கும் .

பெற்றோர்கள்  அந்த குழந்தைக்கு எதில் விருப்பத்தை காட்டுகிறது என்பதை கண்டறிந்து அதனை ஊக்குவிப்பதன் மூலம் அது தனி திறமை வாய்ந்த குழந்தையாக மாற்ற முடியும்  .சில குழந்தைகள் நல்ல கட்டுரைகள் எழுதுவது அல்லது பேச்சாற்றல் மிக்க குழந்தையாக இருக்கலாம் .எதுவாக இருந்தாலும் இந்த உலகத்தில் தனித்தன்மை கொண்டு விளங்குவது  மிகுந்த சிறப்பை தர கூடும் .

குழந்தையின் நினைவாற்றலை அதிகமாக கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம் .தினமும் ஏதாவது ஒரு கீரையை குழந்தைக்கு உணவில் சேர்த்து கொண்டு வரலாம் .

பச்சை காய்கறிகள் மற்றும் ஏதாவது ஒரு பழத்தை கட்டாயமாக எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும் .

சிறு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் தினமும் எடுத்துக்கொள்ளலாம் .தயிர் சில சமயம் மந்த நிலையை ஏற்படுத்தும் அதனால் தினம் தோறும் மோர் சேர்த்து கொள்ளலாம் .

நிறைய புரத உணவுகளையும் ,சத்து மாவு கஞ்சி போன்ற உணவு பொருள்களை எடுத்து கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் .

அதிகமான இரும்பு சத்துள்ள உணவு பொருள்களை சேர்த்து கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் .உலர் திராட்சைகளிலும் ,பேரிச்சம் பழம்,அத்தி பழம் போன்றவற்றிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது .

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் மீன் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது .சைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக பாசிப்பருப்பை எடுத்து கொள்ளலாம் .

சிறு வயதில் இருந்தே வெள்ளை சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம் .அதற்கு பதிலாக தேன் ,நாட்டு சக்கரை ,வெல்லம்,கருப்பட்டி இவற்றை பயன்படுத்தி இனிப்புகள் தயாரித்த உணவு பொருள்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .வெள்ளை சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகளும் மூளையின் நுண்ணிய நினைவாற்றல் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .

இந்த வகை உணவுகளை எடுத்து கொள்வதன்  மூலம் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் .
 

A child's memory can develop very fast up to the age of 10 .Because a child's brain begins to develop from the age of 2 .That is why a child is born to learn to understand this world from the age of 2.