தூங்கி எழுந்த உடன் உடல் களைப்பா இருக்கா?இந்த ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்று உண்டா என்று பார்க்க வேண்டும் .
தூங்கி எழுந்தவுடனே களைப்பாகவும் உற்சாகம் இல்லாமலும் இருக்கிறதா ?அப்படியென்றால் உங்கள் உடலில் மனதில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்குகிறது என்று தான் அர்த்தம்.நம் உடலும் மனமும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே நம்முடை அன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும் .இல்லையென்றால் நம்மால் ஒரு வேலையில் கூட முழுவதுமாக நம் கவனத்தை செலுத்த முடியாது .அது எந்த வேலையாகவும் இருக்கலாம் ,அலுவலக வேலை அல்லது வீட்டு வேலை எதுவாக இருந்தாலும் உங்களால் கவனம் செலுத்துவதில் மிகுந்த சிரமம் இருக்கும் .
காலை எழுந்தவுடனே ஒருவித சோர்வும் களைப்பும் இருந்தால் ,
முதல் காரணம் நம்முடைய தூக்கம் சரியாக இல்லை என்று அர்த்தம் . இரண்டாவதாக நமக்கு மன அழுத்தம் இருந்தால் உற்சாகம் இருக்காது.மூன்றாவது காரணம் உறங்கும் அறையில் காற்றோட்டம் இல்லாமல் இருக்கலாம் . இரவில் தூங்கும் போது குறட்டை விடுவதால் நல்ல சவுண்ட் ஸ்லீப்பர் என எடுத்துக்கொள்ள முடியாது
.மேலும் இரவில் நன்றாக குறட்டை விட்டு தூங்கினால் கூட நன்றாக தூங்கியவர்களாக இருக்க மாட்டார்கள் .இதற்கு காரணம் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளே போகாமல் மூச்சு திணறல் நடந்தது ஒரு நல்ல களைப்பு நீங்க கூடிய ஒரு விஷயம் நடக்காமல் காலையில் எழுந்த பின்னும் உற்சாகம் இல்லாமல் இருக்கும் .அவர்களுக்கு நல்ல காலை நேரம் ,ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கூட தூக்கம் வரும்.காரணம் நமக்கு பிடிக்காத அல்லது நம்ம ஈடுபட முடியாத ஒரு விஷயத்தில் ,ஒரு சந்திப்பு அறையில் (மீட்டிங்கில்)உட்கார்ந்திருக்கும் பொழுது கூட அதில் உட்கார முடியாமல் தூக்கம் வரும் .காரணம்,அந்த இரவு நடந்தது சரியான தூக்கம் கிடையாது .
இரண்டாவது காரணம் அவர்கள் காற்றோட்டம் இல்லாத அறையில் தூங்கியிருக்கலாம்.ஆனால், இயல்பாகவே நல்ல சரியான ஒரு காற்றோட்டமான அறையில் தான் இருக்கிறேன், ஆனால் கூட காலையில் களைப்பாக இருக்குகிறது என்றால் முதலில் பார்க்க வேண்டிய விஷயம் ,ரத்தசோகை இருக்கிறதா என்று , இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும் ஒரு களைப்பும் சோர்வும் எப்பொழுதும் இருக்கும்.
மூன்றாவது காரணம் தைராய்டு குறைவாக இருக்கலாம் .ஒரு இயக்கத்திற்கும் , பல்வேறு செயல்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது தைராய்டு சுரப்பி . பல சமயங்களில் ,ஆரம்பநிலையில் தைராய்டு சுரப்பி கொஞ்சம் குறைவாக இருக்கும் பொழுது பெரியதாக நிறைய பேருக்கு தெரியாது.
அதாவது ,உடலைப் பார்க்க முடியும் பகுதி ,தோலில் அரிப்பு ,படை மாதிரி இருக்கும் இப்படியெல்லாம் பல விஷயங்கள் வரும் . தைராய்டு குறைவு நமது கழுத்துப் பகுதியில் வீக்கம் தெரிகிறதா என்று கண்ணாடியில் பார்த்த போதே நமக்கு கண்டுபிடிக்கலாம் .அல்லது நம்முடைய இயல்பான மருத்துவ சோதனையில் தைராய்டு குறைவு சோதனையில் கண்டுபிடிக்கலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டாலே அது சரி ஆகி விடும் .
நான்காவதாக ரத்த சர்க்கரை அளவு கூடுவது .அந்த மாதிரி இருந்தால் நிறைய பசி எடுக்கும் நிறைய சிறுநீர் கழிப்பார்கள் என்று மட்டும் கிடையாது .சில பேருக்கு புண் வந்தால் உடனே சரி ஆகிடுது .அதனால் ,ரத்த சர்க்கரை இல்லை என்று நினைக்க கூடாது .இதையெல்லாம் தவிர ஒருவருக்கு உடல் எடை திடீர் என்று ஒரு இரண்டு ,மூன்று கிலோ எடை குறைந்து இருக்கிறது என்றால் ரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கா என்பதை பார்த்து கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக ரத்தக் கொதிப்பு ,ரத்தக் கொதிப்பு இருந்தால் தலைவலியும் சேர்ந்து வரும் காலையில் எழுந்தவுடனே ஒரு பக்கம் தலை வலிக்கின்ற மாதிரி ஒரு பாரமான உணர்வு இருந்தால் முதலில் பார்க்க வேண்டியது இரத்த கொதிப்பு . உட்கார்ந்திருக்கும் பொழுது எப்படி இருக்கிறது , படுத்து இருக்கும் போது எப்படி இருக்கிறது ,நின்றுகொண்டிருக்கும் போது எப்படி இருக்கிறது என்று முதல் முறை சோதனை செய்யும் பொழுது பார்க்க வேண்டும்
அப்படி பார்க்கும் பொழுது , இரத்த கொதிப்பின் அளவு உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை விட ,உங்களுடைய வயதை ஒட்டி , உடல் எடையை ஒட்டி இல்லாமல் மிகவும் அதிகமாக இருந்தால் அது உங்களுக்கு சோர்வையும் களைப்பையும் தலைவலியும் சேர்த்து கொடுக்கும்.
Does it mean that your body has a problem with the mind?