சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உங்கள் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா ?

நமது உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்யலாம் ?
நமது ஊரில் மட்டுமே சைக்கிளை உபயோக படுத்தினால் அவமானம் ,நடந்து சென்று நமக்கு தேவையான பொருள்களை வாங்கினால் அசிங்கம் என்று எல்லாம் நினைக்கிறோம் .மேலை நாடுகளில் அதிகமாக காரை உபயோக படுத்தினாலும் நடப்பதையும் ,சைக்கிளில் செல்வதையும் ,மலை ஏறுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் .நாம் மட்டுமே அவற்றை எல்லாம் கடினமாக கருதுகிறோம் .

நடைபயிற்சி :

நமது  உடல்  எப்பொழுதும் சுறு சுறுப்பாக இருக்க நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும் .தினமும் ஒரு வேகமான நடை பயிற்சி செய்ய வேண்டும் .அது எப்பொழுது வேண்டுமாக இருக்கலாம் காலை அல்லது மாலை நடை பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமானதாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும் .குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்யவேண்டும் .நடை பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது  மூன்று அல்லது நான்கு கி .மீ ஆவது நடக்க வேண்டும் .

ஜாகிங் (சீராக ஓடுதல்):

 ஜாகிங் செய்வதால் நமது உடலில் எரிப்பு சக்தி வேகமாக தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெற வழிவகை செய்கிறது.இதனால் உடல் எடையும் குறைகிறது .

ஹைஹீங் (மலை ஏறு நடை பயணம் )
இந்த ஹைஹீங்  செல்வதன் மூலம் நம் உடல் அவ்வளவு உற்சாகம் பெறுகிறது .அந்த காலங்களில் கிராமங்களில் வாழும் மக்கள் மலை ஏறுதலை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .இது மலை ஏறும் பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே மிக சுலபமானதாக இருக்கும் .வெளிநாட்டவர்கள் இதை முக்கிய பங்காக வைத்திருக்கிறார்கள் .வாரம் ஒரு முறை இவர்கள் ஹைஹீங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .இது உடலில் தேவையற்ற கொழுப்பை கரைப்பதுடன் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது .வெளிநாட்டவர்கள் அதிகாலை மற்றும் காலையில் ஹைஹீங் செல்வதை  வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சைக்ளிங் :
சைக்ளிங் செய்வதன் மூலம் நம் கை,கால்களுக்கு தேவையான சக்தி கிடைப்பதுடன் உடலுக்கு உற்சாகமும் கிடைக்கிறது .இது நம்மூரில் பயன்படுத்துவது மிகவும் குறைவு .மேலை நாடுகளில் சைக்கிளில் வெகுதூர பயணம் மேற்கொள்வர்கள்  .

மூச்சு பயிற்சி(பிராணயாமா ) :
மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உடனடியாக சோர்வு நீங்கி உற்சாகம் பெறலாம் .இதற்க்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கினால் போதுமானது .உடல் உற்ச்சாகம் பெற்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறலாம் .இது ஒரு நான்கு மணி நேரம் தூங்கி எழுவதற்கு சமம் .


சரிவிகித உணவு :
சரிவிகித உணவு  எடுத்துக்கொளவது மிகவும் அவசியம் .ஏதாவது ஒரு உணவின் வைட்டமின் சத்து குறைந்தாலும் நமக்கு பலவித பிரச்சனைகள் உருவாகும் .சரிவிகித உணவான காய்கறிகளையும் ,பழங்களையும் ,சிறுதானிய வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் .நாம் உணவை மட்டும் அதிகமாக எடுத்துக்கொண்டு ,அதிக நார்சத்து நிறைந்த காய்கறிகளையும் ,பழங்களையும் தவிர்த்தால் ,நம் உடல் சுறுசுறுப்பாக இருக்காது .அதனால் அணைத்து உணவுகளையும் சரிவிகித்ததுடன் எடுத்துக்கொண்டால் நமது உடல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் .

If we follow any of two of these six things, our body will be healthy and more active .