கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் அந்தக்காலம் .அனால் இந்தக்காலத்திலோ கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே ஃபேஷனாக உள்ளது . அடர்ந்த நீளமான கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள்.ஆனால் இப்பொழுதோ அவ்வப்போது மாறும் கூந் தல் கலர்கள் தான் அழகு என்று கூறுகிறார்கள்.
இயற்கையில் அழகு நிறைந்த கறுப்பு கூந்தல் தான் வயது ஆகும் போது வெள்ளை நிறமாய் மாறுகிறது. இயற் கையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரை நம் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படுவதில்லை . ஆனால் அழகுபடுத்துகிறேன் என்று கலர்களைப் பூசிக்கொள்ளும் போது கூந்தலின் அழகும் ஆரோக்யமும் கெட்டுவிடுகிறது.
சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது மிகவும் ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். அழகில் ஆபத்து நிறைந்திருந்தாலும் அழகு முக்கியம் என்பதே பல பெண்களின் விருப்பமாக இருக்கிறது. பொதுவாக இளநரை, அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள் . அவர்களும் தரமற்ற டைகளை உபயோகிப்பதன் மூலம் நரை மேலும் அதிகமாகவே செய்யும். இது ஒரு புறம் இருக்க இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலரும் கலரிங் செய்து கொள்வதை பேஷன் ஆகா வைத்துள்ளார்கள்
வரம் ஒரு முறை அல்லது மதம் ஒரு முறை என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு அழகு நிலையங்கள் செல்கிறார்கள். இந்தக் கலர்களை உண்டாக்கும் சாயங்கள் உடலுக்குள் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள். ஹேர் கலரிங் செய்யலாம்.அதிலும் கூந்தலின் நிறத்திலிருந்து அதிக வேறுபாடு இல்லாமல் இலேசான மாற்றம் செய்யலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
கலரிங் செய்யும் போது கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும்கூடும் . கூந்தலின் வளர்ச்சியை பாதிக்கும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சருமம் சம்பந்தமான உபாதைகளும் உண்டாகும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்
அடிக்கடி கலரை மாற்றி ஹேர் கலரிங் செய்யும் ஃபேஷன் விரும்பும் இருபாலரும் இனி அப்படி செய்யாதீர்கள். ஒரே கலரை அதுவும் அவசியமாக இருந்தால் மட்டுமே செய்து கொள்ளுங்கள். நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு வர நினைத்தால் நீண்ட நாள்கள் ஆகும்.கூந்தல் பழைய நிலைக்குத் திரும்பினாலும் ஆரோக்யமும் பொலிவுமாய் இருக்காது. சில க்ரீம்களின் லெட் அசிட்டேட் என்னும் வேதிப் பொருள்கள் கலந்திருக்கும். இது சருமப் புற்றுநோயை உண்டாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்வது மிகவும் நல்லது.
நரை போக ஹேர் டை உபயோகிப்பவர்கள் தலையில் இருக்கும் அழுக்குகள் போக ஷாம்பு போட்டு குளித்து கூந்தலை காயவைத்து பிறகே ஹேர் டை போட வேண்டும். டை போட்டு நீண்ட நேரம் காயவைக்க் கூடாது. இதில் இருக்கும் கெமிக்கல்ஸ் கூந்தலின் வேர்க்கால்களிலிருந்து உள்ளே நுழைய வாய்ப்புண்டு. முதன் முதலாக ஹேர் டை பயன்படுத்துபவர்கள் காது ஓரங்களில் இருக்கும் கூந்தலின் ஓரம் தடவி 48 மணி நேரங்களில் அந்த இடத்தில் தடிப்பு, எரிச்சல், அலர்ஜி எதுவும் இல்லையென்றால் மட்டுமே அதைப் பயன்படுத்துங்கள்.
அழகு முக்கியம் தான் அதைவிட ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்
Whether or not the hair is odor-free at that time But nowadays fashion is what color can do to hair. The dark-haired blacksmith is the beauty of women However, nowadays the beauty of the eyelashes that change from time to time is beauty.