அசைவ உணவு பிரியர்களை கேட்டால் ஆயிரம் கதை சொல்லுவார்கள் அசைவ உணவு பற்றி .அப்படிப்பட்ட அசைவ உணவு சாப்பிட்டவுடன் என்ன செய்தால் செரிமான பிரச்சனை வராது என்பதை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியது அசைவ உணவு பிரியர்களின் கட்டாயம் .
முதலில் நாம் பார்க்கவேண்டியது சுடுநீர் (அல்லது )வெண்ணீர் :
அசைவ உணவு சாப்பிட உடன் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெண்ணீர் குடிப்பதன் மூலம் நாம் சாப்பிட்ட அசைவ உணவு ஜீரணிக்க வழிவகை செய்கிறது .சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பின் குளிர்ந்த நீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்வதுடன் குடல் செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது . ஆகவே சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் அசைவ உணவு ஜீரணிக்க வழிவகை செய்கிறது மற்றும் அசைவ உணவுகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது .வெண்ணீர் குடித்தால் , சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்பட்டு மலம் வெளியேற எளிதாகிறது .
இரண்டாவதாக பார்க்கவேண்டியது ஓமம் :
ஓமம் சிறிதவு எடுத்து வெண்ணீரில் காய்ச்சி சிறிதளவு பருகினால் வாயு தொல்லையும் வராது, சாப்பிட்ட உணவும் செரிமானம் அடைந்து விடும்.
மூன்றாவதாக பார்க்கவேண்டியது சீரகம்:
சீரகம் என்பதற்கு அகத்தை சீர் செய்யும் பொருள் என்பது பெயர் தரும்.சீரகம் சிறிதவு எடுத்து வெண்ணீரில் காய்ச்சி சிறிதளவு பருகினால் மேற்குறியவாறு அகத்தை சீர் செய்து ஜீரண சக்தியை தூண்டும்.
நான்காவதாக பார்க்கவேண்டியது எலுமிச்சைசாரு மற்றும் புதினாஇலைகள் :
எலுமிச்சைசாரு பருகுவதன் மூலம் இது ஜீரண சக்தியை தூண்டுவதுடன் உடல் இலகுவாக செய்கிறது .எலுமிச்சை சாறுடன் புதினா இலைகள் கலந்து பருகுவதன் மூலம்
வாயுத்தொல்லை ,அஜீரண கோளாறு,வயிற்று வலி, வயிற்று எரிச்சல்,உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க உதவும்.
இறுதியாக இஞ்சி:
இஞ்சியை தேநீரில் கலந்து பருகும் போது கண்டிப்பாக செரிமான பிரச்சனையை சரி செய்து அடுத்த வேலை உணவிற்கு கூட பசியை தூண்டி விடும்.அந்த அளவிற்கு இஞ்சி தேநீருக்கு சக்தி உண்டு.மேற்குறியவற்றில் உங்கள் உடலுக்கு தேவைனவற்றை நீங்களே தேர்ந்து எடுத்து கொள்ளலாம் .
indigestion