சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டிராகன் பழத்தில் அவ்வளவு இருக்கா ? அப்படி என்னதான் இருக்கு?

டிராகன் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டியவை .அது என்ன டிராகன் பழம் என்று தானே யோசிக்கிறீங்க .இந்த ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் உடல் எடை கூடுகிறது அதற்கு என்ன செய்யலாம் என்று தவித்து கொண்டிருப்பவர்களுக்கு வர பிரசாதமாக வந்தது டிராகன் பழம் .இது டிராகன் முட்டை போல வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருப்பதால்  டிராகன் என்று பெயர் வந்தது .கரோட்டின் மற்றும் லைகோபீன் என்ற சத்துக்கள் உள்ளதால் இது கேரட், தக்காளியை போன்று சிவப்பு நிறத்தை கொண்டிருக்கிறது .


இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு நம்முடைய நாட்டிலும் இது கிடைக்கிறது .இந்த பழம் அதிகமாக மெக்ஸிகோவில் பயிரிடப்படுகிறது .இது அங்கு இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .இது நம்முடைய நாட்டில் தேனியில் பயிரிடப்பட்டு வருகிறது .இங்கு விளையும் பழம் மிகுந்த சுவை உள்ளதாக கூறபடுகிறது .


இதன் உட்புறம் கிவி பழத்தை போன்ற தோற்றமுடையது .உட்புறம் நிறைய விதைகளை கொண்டது .விதையுடன் இந்த பழத்தை உண்ணலாம் .விதைகள் கிவி பழத்தை போலவே செரிமானத்துக்கு மிகவும் நல்லது .இது கொஞ்சம் இனிப்பு மற்றும்  புளிப்பு சுவை கொண்டது .சிலருக்கு இதன் சுவை பிடிக்காது ஆனால் பலர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர் .இதில்  அவ்வளவு சத்துக்கள் உள்ளன .

இதில் மூன்று வகை உள்ளது .சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம் ,சிவப்பு தோலுடுன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் ,மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் என்று மூன்று வகைகள் உண்டு .


இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுவதுடன்  ,உடல் எடையையும் குறைக்க உதவுகிறது .இது முடிவளர்ச்சியை அதிக படுத்துவதற்கும் உதவுகிறது .சருமத்தை பாதுகாக்க உதவுகிறது .முகப்பரு ,வறண்ட தோல் இவற்றை போக்க கூடியதாக உள்ளது .

இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது அத்துடன் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதால் பக்கவாதம் வராமல் தடுக்கிறது .

இது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து ,கெட்டக்கொழுப்பை குறைக்க உதவுகிறது .இதனால் இரத்தநாளங்களில் அடைப்பு உருவாவதை தடுப்பதால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது .

இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது .அதனுடன் முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது .


இதில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகையை போக்க உதவுகிறது .ஆஸ்துமா உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் சுவாசபாதையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்கிறது .

மேலும் உடலின்  முக்கிய உறுப்புகளுக்கு சரியான அளவு ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது .இது அதிகமான நார்சத்துக்களை கொண்டிருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது .

செரிமானத்தை அதிகப்படுத்துவதுடன்  அதன் சம்பந்தமாக வரும்  பிரச்சனைகளையும்  சரி செய்கிறது .நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது .நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் அடிக்கடி நோய்வாய் படுபவர்களுக்கும் ,புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் உதவுகிறது .இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது .உடலில் உள்ள கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது .
எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோயை தடுக்க உதவுகிறது .
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்குறைக்கிறது .

முக்கிய குறிப்பு :இது அதிக குளிர்ச்சி தரும் பழம் ஆதலால் ,அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம் .

It helps to dissolve excess fat in the body and helps in weight loss .It helps to increase hair loss.