சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெண்கள் பருவம் எய்தியதும் தரப்படும் உணவு முறை

தமிழ்நாட்டில் பெண்கள் வயது வந்ததும் ஆரோக்கியமான உணவுகளை குறைந்தது ஆறு மாதங்களுக்கு கொடுப்பது பழங்காலமாக வழக்கத்தில் இருந்தது 

இந்த ஆரோக்கிய பழக்கம் நாகரீகம் வளர வளர மறைந்து போய் பெண்கள் வயதுக்கு வந்து நாளில் மட்டும் கொடுக்கும் வெறும் சடங்காக மாறிவிட்டது 

இமேலும் இதுபோல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதனால் பெண்களுக்கு ஏற்படும்  மலட்டுத்தன்மை நீங்குவதோடு  கருப்பையில் ஏற்படும் கட்டிகளையும் தடுக்கும் 

மாதவிடாய் காலத்தில் 1  நாளிலிருந்து 5  வது நாள் வரை (எள்ளுருண்டை கொடுக்கபடும்)
> வெள்ளை எள் ஒரு கப் 
>சர்க்கரை முக்கால் கப் 
>ஏலக்காய் பொடி கொஞ்சம்
முதலில் எள்ளை பொன்னிறமாக மாறும் வரை வறுத்து பின் அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து  அதை பொடி ஆக்கி நன்றாக பிசைந்து உருண்டை ஆக்கி கொடுக்க வேண்டும் .

ஆறு முதல் பத்திநான்குநாட்களுக்கு உளுந்தங்களி கொடுக்க வேணும் 
>சம்பா அரிசி- ஒரு கப் 
>முழு உளுந்து -கால் கப் 
>ஏலக்காய்பொடி சிறிதளவு 
>வெள்ளம் தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும் 
> சம்பா அரிசி மற்றும் முழு உளுந்து லேசாக வறுத்து  வெள்ளத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதனுடன் அரைத்த மாவு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அதனுடன் நல்லண்ணை சேர்த்து கழி பதம் வரை நன்றாக கிளறி எடுக்க வேண்டும் அதை அந்த பெண்ணுக்கு கொடுப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெரும்.

15 வது நாள் 28 நாள் வரை (வெந்தய கஞ்சி கொடுக்கவேண்டும் )
>வெந்தயம் ஒரு பங்கு
> சம்பா அரிசி நன்கு பங்கு 
>இரண்டையும் சேர்த்து வறுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி எடுத்துக்கொள்ளவேண்டும் 

Eating healthy foods like this will help women eliminate infertility and prevent ovarian tumors.