திருமண உறவானது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .அது எந்த அளவுக்கு உண்மை என்றால் உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களுக்கு பிடித்தமானவர்களாகவும் ,உங்களிடம் அன்பு உள்ளவராகவும் ,உங்களிடம் வெளிப்படை தன்மை உள்ளவராகவும் ,உங்கள் தேவைகளை புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தால் நீங்கள் தான் உண்மையில் அதிர்ஷ்டசாலி .
நம் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் கூறுவதை வைத்தும் நமக்கு நம்முடைய பெற்றோர்கள் கூறுவதை வைத்தும் தெரிந்து கொள்கின்றோம் .நம் பெற்றோர்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே பார்க்கிறோம்.அதை வைத்துக்கொண்டு வாழ்க்கையை கணக்கு போடுகிறோம் இப்படி வாழக்கூடாது .இப்படி தான் வாழவேண்டும் என்று ஒருஒருவரும் அவர்களுக்கென்று ஒரு நெறிமுறைகளை வைத்து கொள்வதுண்டு .
உண்மை நிலைமை என்னவென்றால் வாழ்கை என்பது அவரவர் வாழும் பொழுது தான் அதற்கான புரிதலே ஏற்படுகின்றது என்பது தான் நிகர்சரமான உண்மை .உண்மையில் வாழ்க்கையை இப்படி எல்லாம் வாழவேண்டும் என்று கணக்கு போட்டு வாழ்ந்து விட முடியாது .அனைத்து மேடு பள்ளங்களும் நிறைந்தது தான் வாழ்கை .
ஒருவர் அவர் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார் என்பதை அந்த நபரின் முதுமையில் தான் உணர முடியும் .ஆணோ ,பெண்ணோ அவருடைய முதுமையில் எப்படி உணர்கிறார் என்பதை வைத்து அவருடை வாழ்க்கையில் வாழ்த்திருக்கிறாரா ?இல்லை கடமையே என்று இருந்திருக்கிறா என்று புரியும் .
உங்கள் கணவர் அல்லது மனைவி இந்த பண்புகளை கொண்டிருந்தாள் கண்டிப்பாக உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது .நீங்கள் சரியான துணையுடன் தான் இருக்கிறீர்களா என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம் .
உங்கள் துணை உங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையையும் ,பாதுகாப்பு உணர்வையும் தருகிறார் என்றால் நீங்கள் கவலை பட தேவை இல்லை .நீங்கள் அவருடன் நிம்மதியாகவும் ,சந்தோஷமாகவும் வாழலாம் .
எதிர்காலம் குறித்த முடிவுகளை உங்களிடம் கலந்து ஆலோசிப்பவரா அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.கணவர் அல்லது மனைவி எதிர்காலம் குறித்த முடிவுகளை இருவரும் கலந்து ஆலோசித்த பிறகு இருவரும் ஒருமித்த கருத்து அங்கு முன்னோக்கி செல்லுமானால் வாழ்கை வளமானதாக இருக்கும் .
எப்பொழுது உங்களை ஆதரிப்பவரா,அதாவது எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் உங்களை விட்டு கொடுக்காமல் உங்கள் மனம் அறிந்து செயல் படுவராக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி .உங்களுடைய சோதனை காலங்களில் உங்கள் துணை பக்கபலமாக இருந்தால் அதை விட உங்களுக்கு பலம் வேறு இல்லை .
ஒருவர் தனது வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு முன்னுரிமை அளிப்பவராக இருந்தால் , அவரே உங்களின் சிறந்த துணை .அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்பவரா அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
கணவன் ,மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறார் அதாவது உங்களுக்கும் ,உங்கள் கருத்துக்களுக்கு மரியாதை தருகிறார் என்றால் இருவரும் மனம் ஒன்றிய தம்பதிகளாக இருக்க முடியும் . ஒருவருக்கொருவர் மரியாதை இல்லாதபோதுதான், உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.
உங்கள் துணையானவர் ,உங்கள் குடும்பத்தாரின் மீது மிகுந்த அன்பும் ,அக்கறையும் கொண்டிருத்தல் .துணையின் குடும்பத்தை தன் குடும்பம் போல் எண்ணுதல் . அவர்களுடைய உண்மையான அன்பும் அக்கறையும் உங்கள் வீட்டாருக்கு முழுவதுமாக கிடைக்குமானால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி .
உங்களின் துணை உங்களிடம் வெளிப்படைத்தன்மை கொண்டிருத்தல் அதாவது எந்த ஒரு செயலையும் மறைக்காமல் உங்களிடம் சொல்வது .எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உங்களிடம் உண்மையாக இருப்பது .அடுத்தவர் மூலம் உங்களுக்கு தெரிவதை விட அவரே உங்களிடம் அனைத்து விஷயங்களும் சொல்பவராக இருந்தால் நீங்கள் தான் அதிர்த்தசாலி .
நீங்கள் நோய் வாய்ப்படும் நேரத்தில் உங்களை கவனித்து கொள்பவராகவும் ,உங்களுக்கு தேவையான உதவிகளை செய்பவராகவும் ,உங்களுக்கு முடியாத சமயங்களில் உங்களையும், குழந்தைகளையும் கவனித்து கொள்பவராகவும் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி .
இந்த விஷயங்களையும் உங்கள் துணை கடைபிடிப்பவராக இருந்தால் இந்த உலகில் உங்களை விட வேறு அதிர்ஷ்டசாலியும் இல்லை .உங்களை விட நிம்மதியானவரும் இல்லை .
You are lucky that your husband or wife has these qualities.